YouTurn

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கு தங்ககியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அங்கு தங்ககியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ, 2026 ஜனவரியில் பிஸ்வ இஜ்தமா மாநாட்டில் கலந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

பரவிய செய்தி

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற உடன், சட்ட விரோதமாக குடியேறிய பங்களாதேஷிகள் அங்கிருந்து வெளியேறும் காட்சிகள்.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் மே 4 அன்று வெளி​யிடப்​பட்​டன. மொத்​தம் 293 தொகுதிகளுக்​கான முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதில் 207 தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது youtuberdip என்ற instagram பக்கத்தில் ஜனவரி 05, 2026 அன்று பரவி வரும் வீடியோ காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் Bishwa Ijtema 2026 Insane Crowd என்று குறிப்பிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. 


இதையடுத்து  Bishwa Ijtema குறித்து தேடினோம். அப்போது Zee News ஊடகத்தில் ஜனவரி 03, 2026 அன்று “Bishwa Ijtema 2026: Bishwa Ijtema talks about brotherhood-patience-tolerance, Firhad said after coming to Puinan, Hooghly” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஹூக்ளியில் உள்ள புய்னானில் உலக இஜ்திமா தொடங்கியுள்ளது. மத சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி மற்றும் இஸ்லாமிய அமைதி ஆகிய செய்திகளை சமூகத்திற்கு வழங்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்துள்ளனர் என்று குறிப்பிடபட்டிருந்தது.  

image.png


அதே போல் The Statesman ஊடகத்தில் இது குறித்து ஜனவரி 03, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் உலகின் மிகப்பெரிய அமைதியான இஸ்லாமியக் கூட்டங்களில் ஒன்றான பிஸ்வா இஜ்திமா,  மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 5 முதல் 10 மில்லியன் பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அம்மாநிலத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் வெளியேறியதாகப் பரவும் வீடியோ, 2026 ஜனவரியில் பிஸ்வ இஜ்தமா மாநாட்டில் கலந்துக்கொள்ள இஸ்லாமியர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ. மேலும் பரவி வரும் வீடியோ மேற்கு வங்கத்தில் தேர்தல் நடப்பதற்கு ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க