YouTurn

1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக !

1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

கி.பி 1556-ல், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து மசூதியை கட்டினார் - பாஜக

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

அயோத்தி ராமர் கோவில் வருகின்ற ஜனவரி 22 அன்று பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பாரத ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "கி.பி 1556 ஆம் ஆண்டில், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து, மசூதியை கட்டினார்." என்று குறிப்பிட்டு 1:26 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அதில், "ராமராஜ்யம் - போராட்டத்திலிருந்து முடிவு வரை, அத்தியாயம் 1 - அமாவாசை,  20ம் நூற்றாண்டில் கோவில் கட்டுவதற்கான போராட்டத்தின் கடைசி போர் மணி எப்படி ஒலித்தது என்பதை பாருங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது. 





உண்மை என்ன ?

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் வெளியிடப்படும், 11-ம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில், "இந்தியாவை ஆட்சி செய்து வந்த இப்ராகிம் லோடியை வீழ்த்த, அவருடைய எதிரி தெளலத்கான் லோடியின் வேண்டுகோளின் பெயரிலேயே பாபர் இந்தியாவிற்குள் வந்து முகலாய பேரரசை முதன்முதலில் தோற்றுவித்தார் என்பதையும், இறுதியாக கிபி 1529-ல் நடைபெற்ற காக்ரா போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் கிபி 1530-ல் இறந்தார் என்பதையும் அறிய முடிந்தது.



பின்னர் ஆட்சிக்கு வந்த பாபரின் அடுத்த வாரிசான ஹூமாயூன், 1530 முதல் 1540 வரையிலும், பின்னர் ஷெர்ஷா அரசரின் தோல்விக்கு பின்பு மீண்டும் 1555 முதல் 1556 வரையிலும் இந்தியாவை ஆட்சி செய்தார். இறுதியாக கிபி 1556-ல் தனது டில்லி கோட்டையின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து ஹூமாயூன் இறந்து போனார். இதன் மூலம் 1556ல் முகலாய பேரரசர்களான பாபரும், அவருடைய மகனான ஹூமாயூனும் இறந்துவிட்டனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.



இதே போன்று இந்தியா டுடே கட்டுரையில் கடந்த 2019-ல் வெளியிட்டுள்ள கட்டுரையிலும், பாபர் கிபி 1530-ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் The Britannica இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், பாபர் மசூதி 1528-ம் ஆண்டு செப்டம்பரில் கட்டப்பட்டது என்றும், இது பாபரின் ஆணைப்படி பாபரின் அதிகாரியான மீர் பாக்கி என்பவரால் சம்பல் மற்றும் பானிபட்டில் உள்ள மற்ற இரண்டு மசூதிகளுடன் சேர்த்து கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



முடிவு:

நம் தேடலில், கிபி 1556-ல் பாபர் அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பாஜக பரப்பும் தகவல் தவறானவை. கிபி 1530ம் ஆண்டே பாபர் இறந்து விட்டார் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க