YouTurn

அயோத்தி மற்றும் பனாரஸ் ரயில் நிலையம் எனப் பரவும் AI படங்கள் !

அயோத்தி மற்றும் பனாரஸ் ரயில் நிலையம் எனப் பரவும் AI படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


  1. இது கோயில் கிடையாதுங்க! பனாரஸ் மெட்ரோ நிலையம்..




Twitter Link

2. அயோத்யா ரயில்வே நிலையம்..



Twitter Link

விரிவான விளக்கம்

இது கோவில் கிடையாது பனாரஸ் மெட்ரோ நிலையம் என்றும், அயோத்தி ரயில் நிலையத்தைப் பாருங்கள் என்று கூறியும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. மேலும் அதில் ரயில் நிலையங்கள் அரண்மனை போன்ற தோற்றங்களுடன் இருப்பதையும் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படங்கள் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் பனாரஸ் மெட்ரோ என்று பரவி வரும் AI படம், முதன்முதலில் அமர் என்பவரது எக்ஸ் பக்கத்தில் கடந்த அக்டோபர் 21 அன்று "பாரத் RRTS ரயில் மெட்ரோ" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதில் பரவி வரும் புகைப்படத்தைப் போன்றே வேறு சில AI படங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன.



மேலும் இவருடைய எக்ஸ் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில், அவர் இதே போன்று பல AI புகைப்படங்களை பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது.



அயோத்தி ரயில் நிலையம் என்று பரவி வரும் AI படம், முதன்முதலில் The Madhya Pradesh Index என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த அக்டோபர் 27 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் அயோத்யா ரயில் இவ்வாறு இருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு இருக்கிறது என்று கூறி, அயோத்தியின் உண்மையான ரயில் நிலையத்தின் படமும் இணைக்கப்பட்டிருந்தது.



அயோத்தியின் உண்மையான ரயில் நிலையத்தின் படங்களை "அயோத்தி ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகளின் சில படங்கள்" என்று கூறி ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் மூலம் உறுதி செய்யமுடிந்தது.



மேலும் பரவி வரும் புகைப்படங்கள் AI புகைப்படங்கள் தானா என்பது குறித்து hivemoderation இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்ததில் இவை 99.9% AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிபடுத்த முடிந்தது.



மேலும் இதே போன்று பல ரயில் நிலையங்களின் புகைப்படங்களும், AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.





மேலும் படிக்க: தீவிர சனாதன சங்கியான எலான் மஸ்க் எனத் தவறாகப் பரப்பப்படும் AI படம் !

இதற்கு முன்பும் AI புகைப்படங்களை உண்மையானவை என்று கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பி வந்தனர். இது குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ஹாலிவுட் நடிகர் ராக் இந்து மதத்திற்கு மாறியதாக தவறாகப் பரப்பப்படும் AI படங்கள் !

மேலும் படிக்க: பிரதமர் மோடியின் புதிய உடை அலங்காரம் எனத் தவறாகப் பரப்பப்படும் AI புகைப்படம் !

முடிவு:

நம் தேடலில், இவை கோவில்கள் அல்ல, பனாரஸ் மற்றும் அயோத்தியின் ரயில் நிலையங்கள் என்று கூறி பரவி வரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்பதையும், இவை AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க