YouTurn

ஒடிசா தேர்தல்களில் பாஜக 2004ல் இருந்து வெற்றி பெற்ற தொகுதிகள் என வரிசையாக தவறான தரவுகளை கூறிய அண்ணாமலை!

ஒடிசா தேர்தல்களில் பாஜக 2004ல் இருந்து வெற்றி பெற்ற தொகுதிகள் என வரிசையாக தவறான தரவுகளை கூறிய அண்ணாமலை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

ஒடிசாவில் நவீன் பட்நாயக் உடன் கூட்டணி அமைக்க சொல்லியிருந்தால் இன்று பாஜக கட்சி ஆட்சி அமைத்திருக்க முடியுமா?  1 சதவீத கட்சி என்று சொன்னீர்கள் ஒரிசாவில். 2004 இல் பூஜ்யம் கட்சி என்று சொன்னீர்கள். ஒரு சீட்டு 2009 இல். 2014 இல் 3 சீட்டு. 2019 இல் எட்டு சீட்டு. ஒரு கட்சி படிப்படியாகத்தான் வளர முடியும். எனக்கு கொடுத்திருக்கக்கூடிய வேலையும் இப்படி தான். 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்தியாவில் 18வது மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 19 இல் தொடங்கி ஜூன் 01 வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டன. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 04 அன்று நடைபெற்றது. இதில் 'பாஜக' தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், எதிர்க்கட்சிகளான 'இந்தியா' கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில், பாஜகவின் தோல்வி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளித்த அவர், "ஒடிசாவில் நவீன் பட்நாயக் உடன் கூட்டணி அமைக்க சொல்லியிருந்தால் இன்று பாஜக கட்சி ஆட்சி அமைத்திருக்க முடியுமா?  1 சதவீத கட்சி என்று சொன்னீர்கள் ஒரிசாவில். 2004 இல் பூஜ்யம் கட்சி என்று சொன்னீர்கள். ஒரு சீட்டு 2009 இல், 2014 இல் 3 சீட்டு, 2019 இல் எட்டு சீட்டு. ஒரு கட்சி படிப்படியாகத்தான் வளர முடியும். எனக்கு கொடுத்திருக்கக்கூடிய வேலையும் இப்படி தான்" என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் அண்ணாமலை பேசியுள்ள இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியுடன் பாஜக 2004 இல் கூட்டணி அமைத்திருந்தது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. 

ஒரிசா 2004 சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்: 

ஒரிசாவில் 2004 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இதில் பாஜக மட்டும் 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.



இதே போன்று 2004 இல் ஒடிசாவில் நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜக பிஜு ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து, பாஜக மட்டும் அங்கு 32 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 2004 இல் பாஜக அங்கு பூஜ்ஜிய இடங்களையே வெற்றி பெற்றதாக அண்ணாமலை கூறியிருக்கும் தரவுகள் முற்றிலும் தவறானவை



ஒரிசா 2009 சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்: 

ஒரிசாவில் 2009 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் அங்கு ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் அங்கு 2009 இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



ஒரிசா 2014 சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்: 

ஒரிசாவில் 2014 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. அங்கு அப்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அங்கு 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். இதுவும் தவறான தகவலே.



ஒரிசா 2019 சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்: 

2019 இல் ஒரிசாவில் நடைபெற்ற தேர்தல்களில், லோக்சபாவில் பாஜக 8 இடத்தையும், சட்டசபை தேர்தலில் 23 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. இத்தேர்தல் குறித்து அண்ணாமலை 8 சீட்டுகளை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது சரியே.



மொத்தத்தில் ஒரிசா தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் என ஆண்டு வாரியாக அண்ணாமலை கூறியிருந்த தகவல்கள 2019 ஐத் தவிர்த்து அனைத்தும் தவறானவை.

முடிவு:

நம் தேடலில், ஒரிசாவில் பாஜக 2004 இல் பூஜ்யம், 2009 இல் ஒரு சீட்டு , 2014 இல் 3 சீட்டு வெற்றி பெற்றதாக அண்ணாமலை கூறியுள்ள தகவல்கள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க