YouTurn

’சக்தி நிவாஸ்’ திட்டத்தை காப்பியடித்து கொண்டுவரப்பட்டதா ’தோழி விடுதி’ திட்டம்? வழக்கம் போல் பொய் சொல்லும் அண்ணாமலை!

’சக்தி நிவாஸ்’ திட்டத்தை காப்பியடித்து கொண்டுவரப்பட்டதா ’தோழி விடுதி’ திட்டம்? வழக்கம் போல் பொய் சொல்லும் அண்ணாமலை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வேலைவாய்ப்புகளில் பெண்கள் பங்கேற்பை அதிகப்படுத்த நினைக்கும் மாநிலங்களுக்கு ’தோழி விடுதி’ திட்டம் ஒரு நடைமுறை முன்மாதிரியாக இருக்குமென்று ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கையே ஒப்புக்கொண்டுள்ளது.

பரவிய செய்தி

"ஒன்றிய அரசு கொண்டு வந்த 'சக்தி நிவாஸ்' திட்டத்தை காப்பியடித்து திமுக 'தோழி விடுதி' திட்டத்தை கொண்டு வந்தது" - அண்ணாமலை


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

’இந்திய டுடே’ பத்திரிகை சமீபத்தில் ’Round Table Tamilnadu’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. அதில் உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ”உழைக்கும் பெண்கள் தங்கி பணி புரியும் வகையில் திமுக அரசு கொண்டு வந்த ’தோழி விடுதி’ திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒன்றிய அரசு வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக” தெரிவித்தார்.


இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், ‘ஒன்றிய அரசு பணிபுரியும் மகளிருக்கான கொண்டு வந்த  ’சக்தி நிவாஸ்’ திட்டத்தின் கீழ் தான் தோழி விடுதிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அதனை மறைத்து ‘தோழி விடுதி’ திட்டத்தை பார்த்து ஒன்றிய அரசு திட்டம் அறிவித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்’ என்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் எழுதியுள்ளார்.

உண்மை என்ன?


முதலில் ’தோழி விடுதி’ திட்டம் ‘சக்தி நிவாஸ்’ திட்டத்தின் கீழ் தான் தொடங்கப்பட்டதா? என்பது குறித்து தேடினோம். 


’தோழி விடுதி’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அத்திட்டம் ’Tamil Nadu  Working  Women's  Hostels Corporation  Limited  (TNWWHCL)’ என்ற நிறுவனத்தின் கீழ் வருவதாகவும், இந்த நிறுவனம் அதிமுக ஆட்சியின் போது 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பதும் தெரியவருகிறது. 2022 ஏப்ரல் மாதம் ‘சக்தி நிவாஸ்’ திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு ’தோழி விடுதி’ திட்டத்தின் முன்மாதிரியை செயல்படுத்தி வந்துள்ளது. 


image.png


மேலும் ’தோழி விடுதி’ குறித்து ஒன்றிய அரசு ஏதாவது குறிப்பிட்டிருக்கிறதா என்று தேடியபோது,  ‘Economic Survey 2025-26’ ஆவணத்தில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது. இந்த ஆவணத்தில் 12ஆவது அத்தியாத்தில், உழைக்கும் பெண்களுக்கு குறைந்த விலையில் தங்குமிடம் அமைப்பது குறித்த தலைப்பில், ‘வேலைவாய்ப்புகளில் பெண்கள் பங்கேற்பை அதிகப்படுத்த நினைக்கும் மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் அரசு-தனியார் கூட்டு அடிப்படையில் செயல்படுத்தப்படும் ’தோழி விடுதி’ திட்டம் ஒரு நடைமுறை முன்மாதிரியாக இருக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது. 


image.png


மேற்கூறிய விவரங்களிலிருந்து, ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே ‘தோழி விடுதி’ முன்மாதிரியான திட்டம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு தான், முதல்வர் ஸ்டாலின் ’தோழி விடுதி’ திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒன்றிய அரசு புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.


முடிவு:


ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே முன்மாதிரியான திட்டம் என்று சொன்ன ’தோழி விடுதி’ திட்டத்தை, ஒன்றிய அரசின் ‘சக்தி நிவாஸ்’ திட்டத்தை திமுக அரசு காப்பியடித்து தான் செயல்படுத்தி வருவதாக தவறான தகவலை அண்ணாமலை பரப்பிவருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க