YouTurn

இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 25 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்களா? அண்ணாமலை சொல்லும் தவறான தகவல்!

இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 25 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்களா? அண்ணாமலை சொல்லும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தற்போது நிலையில் நாடாளுமன்றத் தொகுதியில் சராசரியாக 17.84 லட்சம் வாக்காளர்கள் தான் இருக்கிறார்கள்.

பரவிய செய்தி

‘இன்றைய காலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 25 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்’ - அண்ணாமலை.


YouTube Link


விரிவான விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ‘இன்றைய காலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 25 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மக்களை சந்திக்க முடிவதில்லை. மோடி கொண்டு வந்த தொகுதி மறுவரையறையின் படி நாடாளுமன்றத் தொகுதிகளை 543-லிருந்து 816-ஆக உயர்த்தியிருந்தால், 12 லட்சம் பேருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (MP) என்ற நிலை ஏற்பட்டிருக்கும்’ என்று பேசினார்.



உண்மை என்ன?


இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு சராசரியாக எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து இணையத்தில் தேடினோம். ’The Indian EXPRESS’ செய்தித்தளத்தில் ஒரு செய்தியைக் காணமுடிந்தது. 


image.png


2025 மார்ச் மாதம் வெளியாகியிருந்த அந்த செய்தியில், ’2024ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு சராசரியாக 17.84 லட்சம் வாக்காளர்கள் இருந்ததாக’ தேர்தல் ஆணையம்’ தெரிவித்துள்ளது. 


அதேபோல் கடைசியாக 1973-ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதற்கு பின்னர் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1977-ல் நடந்தது. அப்போது ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு சராசரியாக 5.93 லட்சம்  வாக்காளர்கள் இருந்தார்கள். 

 

image.png


அதேபோல், ’Down To Earth’ கட்டுரையின் ஒன்றின்படி, 1951-ல் நாடாளுமன்றத் தொகுதிக்கு சராசரியாக 3.54 லட்சம் வாக்காளர்கள் இருந்ததாகவும், 2014ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிக்கு சராசரியாக 15 லட்சம் வாக்காளர்கள் இருந்ததாகவும் தெரியவருகிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, 1951ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத் தொகுதியின் சராசரியான வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. ஆனால், கடைசியாக நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாடாளுமன்றத் தொகுதிக்கு சராசரியாக 17.84 லட்சம் வாக்காளர்கள் தான் இருந்துள்ளனர்.


முடிவு:


தற்போது நாடாளுமன்றத் தொகுதியில் சராசரியாக 17.84 லட்சம் வாக்காளர்கள் தான் இருக்கிறார்கள். இதனை மிகைப்படுத்தி தொகுதிக்கு 25 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக அண்ணாமலை தவறான தகவலை பரப்புகிறார். 



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க