YouTurn

தற்போது கேரள அரசு 'PM-SHRI' திட்டத்தை நடைமுறைபடுத்தி வருவதாக தவறான தகவலை பரப்பும் அண்ணாமலை!

தற்போது கேரள அரசு 'PM-SHRI' திட்டத்தை நடைமுறைபடுத்தி வருவதாக தவறான தகவலை பரப்பும் அண்ணாமலை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கேரள அரசு PM-SHRI திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால், உடனடியாக அந்த முடிவை திரும்ப பெற்றுக்கொண்டது.

பரவிய செய்தி

 ”PM-SHRI திட்டத்தில் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா அரசு கையழுத்திட்டு அந்த திட்டத்திற்காக நிதியை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்” - அண்ணாமலை


Youtube Link 

விரிவான விளக்கம்

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அது குறித்து பல்வேறு கட்சியினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 


இந்நிலையில்,  இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை,  PM-SHRI திட்டத்தில் தமிழ்நாடு இணையாமல் இருப்பதை குறிப்பிட்டு, ’PM-SHRI திட்டத்தில் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரளா அரசு கையழுத்திட்டு அந்த திட்டத்திற்கான நிதியை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார். 



உண்மை என்ன?


’PM-SHRI’ திட்டத்தில் கேரள அரசு இணைந்தது குறித்த செய்திகளைத் தேடினோம். ‘The Indian Express’ செய்தித்தளத்தில் இது குறித்து வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.



2025 அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகியிருந்த அந்த செய்தியில், ‘இது வரை PM-SHRI திட்டத்தில் இணைவதை கடுமையான எதிர்த்து வந்த கேரளா, அந்த எதிர்ப்பை கைவிட்டு, ’PM-SHRI’ திட்டத்தில் இணைந்துகொள்ள ஒன்றிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘இவ்வாறு ’PM-SHRI’ திட்டத்தில் இணைய கேரளா அரசு ஒப்புக்கொண்டதை எதிர்க்கட்சியான காங்கிரஸ் மட்டுமல்ல, CPI (M) தலைமையில் ஆளும் இடது ஜனநாயக கூட்டணியில் (LDF) அங்கம் வகிக்கும் CPI கட்சியும் கடுமையாக எதிர்ப்பதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png


மேலும் கேரளாவில் ’PM-SHRI’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த செய்திகளை தேடியபோது, ‘The News Minute’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘PM-SHRI’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை நிறுத்தி வைக்குமாறு 2025 நவம்பர் 12ஆம் தேதி கேரளா அரசாங்கம் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


இதிலிருந்து, கேரள அரசு ’PM-SHRI’ திட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டாலும், கூட்டணி கட்சியின் எதிர்ப்பை கணக்கில் கொண்டு உடனடியாக அந்த முடிவை கைவிட்டுள்ளது தெரிகிறது.


முடிவு:


’PM-SHRI’ திட்டத்தில் இணைய கேரள அரசு ஒப்புக்கொண்டது உண்மைதான். ஆனால் கேரள அரசு இந்த முடிவை திரும்ப பெற்றுக்கொண்டது. தற்போது கேரளாவில் ’PM-SHRI’ திட்டம் நடைமுறையில் இல்லை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க