YouTurn

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 62,000 நடந்துள்ளன என்று பொய் பரப்பும் அன்புமணி!

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 62,000 நடந்துள்ளன என்று பொய் பரப்பும் அன்புமணி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ், 2021ஆம் ஆண்டு 6064 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 6580 வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 6968 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் 2021ல் 19,173 வழக்குகளும், 2022ல் 20,415 வழக்குகளும், 2023ல் 22,393 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 2021ல் 17,261 வழக்குகளும், 2022ல் 20,762 வழக்குகளும், 2023ல் 22,390 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 62,000 நடந்துள்ளன என்று பொய் பரப்பும் அன்புமணி!

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளருக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது 

தமிழ்நாட்டில் 62,000 குழந்தைகள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்தார். 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரைக்கான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை பார்க்கமுடிந்தது. அதில் தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் கீழ், 2021ஆம் ஆண்டு 6064 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 6580 வழக்குகளும், 2023ஆம் ஆண்டு 6968 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அன்புமணி தெரிவித்த எண்ணிக்கைக்கு முற்றிலும் மாறாக இருந்தது. 


மேலும் அந்த NCRB தரவுகளில், பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசத்தில் 2021ல் 19,173 வழக்குகளும், 2022ல் 20,415 வழக்குகளும், 2023ல் 22,393 வழக்குகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 2021ல் 17,261 வழக்குகளும், 2022ல் 20,762 வழக்குகளும், 2023ல் 22,390 வழக்குகளும் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் 2021ல் 16,838 வழக்குகளும், 2022ல் 18,682 வழக்குகளும், 2023ல் 18,852 வழக்குகளும் பதிவாகியுள்ளன. 


முடிவு: 

ஆக NCRB தரவுகள் இப்படி இருக்க, தமிழ்நாட்டில் தான் சிறார்கள் மீதான குற்றங்கள் அதிகம் நடந்திருப்பதாக அன்புமணி தவறான தகவலை பரப்பி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க