YouTurn

இந்தியாவிலே அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா? அன்புமணி சொல்லும் தவறான தகவல்!

இந்தியாவிலே அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதா? அன்புமணி சொல்லும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

NCRB தரவுகளின் படி தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கொலைகள் நடக்கிறது.

பரவிய செய்தி

”கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் 8,752 கொலைகள் நடந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக கொலைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு தான்” - அன்புமணி, பாமக தலைவர்.    


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

கடந்த நான்கரையாண்டு கால திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துவிட்டது என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ’கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் 8,752 கொலைகள் நடந்துள்ளன. இந்தியாவிலேயே அதிக கொலைகள் நடந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1,977 பெண்களும் 367 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், குறிப்பாக 38 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்’ என்று பாமக் தலைவர் அன்புமணி கூறியதாக தினமணி ஊடகம் நீயூஸ் காட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை மோகன். G சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.



உண்மை என்ன?


கடந்த 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது. இதனால் 2021ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டில் எத்தனை கொலைகள் நடந்துள்ளன என்பது பற்றி தேடினோம். முதலில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) ‘Crimes in India - 2023’ அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு 1686 கொலைகளும், 2022ஆம் ஆண்டு 1690 கொலைகளும், 2023ஆம் ஆண்டு 1681 கொலைகளும் நடந்துள்ளன என்பது தெரிய வருகிறது. 


2024ஆம் ஆண்டிற்கான ’NCRB’யின் 'Crimes in India' அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு 1,540 கொலைகள் நடந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதேபோல், 2025ஆம் ஆண்டில் 1,461 கொலைகள் நடந்துள்ளதாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் குறிப்பிட்டுள்ளார். 


image.png


ஆனால் தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் கொடுத்துள்ள எண்ணிக்கை, NCRB கொடுக்கும் எண்ணிக்கையை விட குறைவாகவே இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 1597 கொலைகள் நடந்ததாக  உள்துறை செயலாளர் தீரஜ் குமார் குறிப்பிடுகிறார். ஆனால் NCRB தரவுகளின் படி இந்த எண்ணிக்கை 1686 என்று இருக்கிறது.



இருப்பினும் நமக்கு கிடைத்துள்ள தரவுகளைக் கொண்டு பார்க்கும் போது கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 8058 கொலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது. உள்துறை செயலாளர் கொடுத்துள்ள எண்ணிக்கை, NCRB கொடுக்கும் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், இந்த எண்ணிக்கை அன்புமணி கொடுத்துள்ள எண்ணிக்கைக்கு சற்று நெருக்கமாகவே இருக்கிறது. அதாவது அன்புமணி கொடுத்துள்ள எண்ணிக்கை கிட்டதட்ட சரியானது தான்.


ஆனால், NCRB தரவுகளின் படி தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக கொலைகள் நடப்பதாக தெரிய வருகிறது. இது பற்றி அன்புமணி எதையும் கூறாமல் மறைக்கிறார். மேலும் இவையெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதும் அந்த பாஜகவுடன் தான் தற்போது அன்புமணி கூட்டணி வைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். 

image.png


மேலும், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த போது 2019ஆம் ஆண்டு 1745 கொலைகளும், 2020ஆம் ஆண்டு 1661 கொலைகளும் நடந்துள்ளதாக NCRB தரவுகளின் படி தெரிய வருகிறது. மேலும், அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2012ஆம் ஆண்டில் 1,943 கொலைகளும், 2013ஆம் ஆண்டில் 1,927 கொலைகளும் தமிழ்நாட்டில் நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.  2012 முதல் 2024 வரையிலான 12 ஆண்டுகளை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, இந்த ஆண்டுகளில் தான் மிக அதிகமான கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளதாக தெரிகிறது. 


இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது. இந்தியாவிலே அதிக கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி சொல்வது உண்மை விவரத்தை மிகைப்படுத்தி தவறாக கூறுவதாகும். மேலும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் கூடவோ குறையவோ இல்லை. 


முடிவு:


கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவிலே அதிக கொலைகள் நடந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி சொல்வது தவறாக தகவலாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க