யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“லடாக் கலவரத்தில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் செபக்“ எனக்கூறி தமிழ் ஜனம் ஊடகம் உட்பட பலர் வெளியிட்டுள்ள செய்தி தவறானது. பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ‘PS Tsepag’ அல்ல. வேறு நபர்.
பரவிய செய்தி
சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர்; லடாக்கில் கலவரத்தில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் TSEPAG. இவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என பாஜகவினர் குற்றச்சாட்டு
விரிவான விளக்கம்
லே லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் 6- ஆவது அட்டவணை கோரிக்கைகள் தொடர்பாக சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் "அதில் கைது செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் கவுன்சிலரும் ஒருவர், கைது செய்யப்பட்ட ‘TSEPAG’ ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என பாஜகவினர் குற்றச்சாட்டு" எனக் குறிப்பிட்டு தமிழ் ஜனம் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை பாஜகவைச் சேர்ந்த அமித் மாளவியா உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
This man rioting in Ladakh is Phuntsog Stanzin Tsepag, Congress Councillor for Upper Leh Ward.
He can be clearly seen instigating the mob and participating in violence that targeted the BJP office and the Hill Council.
Is this the kind of unrest Rahul Gandhi has been… pic.twitter.com/o2WHdcCIuC
The person wearing a mask and carrying a rod was seen leading the violent mob which ran amok in Leh, Ladakh, on 24 September 2025.
He is Phuntsog Stanzin Tsepag, Congress Councillor for Upper Leh Ward.
He was seen instigating the mob and participating in the violence directed… pic.twitter.com/6Vx6DwWCef
உண்மை என்ன?
பாஜக எம்பி உட்பட பலரும் சமூக ஊடகங்களில் ஒரு புகைப்படத்தை குறிப்பிட்டு "இவர் காங்கிரஸ் கவுன்சிலர் செபக், லடாக் கலவரத்தில் இவரின் முக்கிய பங்கு உள்ளது" என்று கூறி பரப்பி வருவதால், இது குறித்து ஆய்வு செய்துபார்த்ததில், கைது செய்யப்பட்டவர் ‘TSEPAG’ அல்ல, வேறு நபர் என்பதை அறிய முடிந்தது.
“Glacier Times” ஃபேஸ்புக் பக்கத்தில் லே லடாக்கில் நடைபெற்ற போராட்டம் குறித்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில், பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபரை வீடியோவில் காண முடிந்தது.

இதே போன்று, “India Today“ யூடியூப் பக்கத்திலும் இது குறித்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.
எனவே பரவி வரும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள காங்கிரஸ் கவுன்சிலர் செபக்கின் (TSEPAG) புகைப்படத்தையும், பரவி வரும் வீடியோவில் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த நபரின் புகைப்படத்தையும் ஆய்வு செய்ததில், இருவரும் வேறு வேறு நபர்கள் என்பதை அறிய முடிந்தது.

இது குறித்து, ‘The Print’ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியிலும், “லே மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ஸ்டான்சின் நோர்பூ, வீடியோவில் காணப்பட்ட நபர் செபாக் அல்ல என்று உறுதி செய்துள்ளார்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு தன்னை குறித்து தவறாக பரப்பி வருபவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக ‘PS Tsepag’ தனது சமூக ஊடகப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
முடிவு:
நம் தேடலில், “லடாக் கலவரத்தில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் செபக்“ எனக்கூறி 'தமிழ் ஜனம்' ஊடகம் உட்பட பலர் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பது உறுதியாகிறது. பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் செபக் (PS Tsepag) அல்ல. வேறு நபர்.