YouTurn

பூ கட்டும் மெஷின் என்று பரவும் AI வீடியோ!

பூ கட்டும் மெஷின் என்று பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பூ கட்டும் மெஷின் என்று சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

pooo matum machine 

image.png

Youtube Link / Archived Link

விரிவான விளக்கம்

பூ கட்டும் மெஷின் என்று கூறி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கையில் பூக்கள் கட்டாமல், மோட்டார் போல் உள்ள ஒரு மெஷின் பூக்கள் கட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோ கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Tamil Aacharyam என்ற யூடியூப் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் ஜனவரி 09, 2026 அன்று ”பூ கட்டும் மெஷின்”  என்று தலைப்பிட்டு பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது. மேலும் அந்த வீடியோவில் இது ஆராய்ச்சி, விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுருந்தது. 


இதையடுத்து அந்த யூடியூப் பக்கத்தை ஆய்வு செய்தி பார்த்தோம். அப்போது Description-ல் AI Creative வீடியோஸ் என்று குறிப்பிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் அந்த பக்கத்தில் AI மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்கள் இருந்ததையும் பார்க்கமுடிந்தது. 

image.png


இது AI மூலம் உருவாக்கப்பட்ட  என்பதை உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவின் screenshotகளை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ, 99.9% AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது. 


முடிவு: 

எனவே, பூ கட்டும் மெஷின் என்று சமூகவலைதளங்களில் பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க