யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி ஒருவர் கீழே விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதல்ல. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி ஒருவர் சாலையில் விழுந்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் கோவை அவிநாசி சாலையில் நடந்ததாக கூறி சில பதிவுகளும், உத்திரப்பிரதேசத்தின் யமுனா விரைவு சாலையில் நடந்ததாக கூறி சில பதிவுகளும் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவை கூர்ந்து கவனிக்கும் போது, வழக்கத்திற்கு மாறான பல விஷயங்களை காணமுடிந்தது. பொதுவாக ஆம்புலன்ஸில் நோயாளி செல்லும்போது அவருக்கு துணையாக மருத்துவ உதவியாளர்கள் அல்லது நோயாளிக்கு வேண்டியவர்கள் கண்டிப்பாக உடனிருப்பார்கள். ஆனால் பரவி வரும் வீடியோவில் நோயாளி தவிர்த்து யாரும் காணப்படவில்லை.
அதே போல் ஆம்புலன்சின் முகப்பு பகுதியில் தான் ஆம்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை திருப்பி எழுதியிருப்பார்கள். ஆனால், இந்த வாகனத்தின் பின்பக்கத்தில் ஆம்புலன்ஸ் வார்த்தையை திருப்பி எழுதியுள்ளனர். இது மேலும் சந்தேகத்தை கூட்டியது.

இந்நிலையில் இந்த வீடியோ ஏஐ மூலம் வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation, Sightengine போன்ற செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் என்று பரவும் AI வீடியோ!
பிரிட்டிஷ் போலீஸ் நாயிக்கு இறுதி சடங்கு என்று பரவும் AI வீடியோ!
முடிவு:
எனவே, ஓடும் ஆம்புலன்சிலிருந்து ஸ்ட்ரெச்சருடன் நோயாளி ஒருவர் கீழே விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதல்ல. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.
