YouTurn

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் என்று பரவும் ஏஐ வீடியோ!

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் என்று பரவும் ஏஐ வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் கலப்பதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

பாய் கடை பிரியாணி டேஸ்டாக இருப்பதன் ரகசியம்..

இதை சொன்னால் எவன் கேட்கிறான் இந்த எச்சை சோத்துக்கு தான் காசையும் கொடுத்து நாக்கை தொங்க போட்டு வெறி‌புடிச்ச நாயை போல அலையுறாங்க....

விரிவான விளக்கம்

பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் கலப்பதாக ஒரு வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில் பிரியாணி செய்திருக்கும் பாத்திரத்திற்கு அருகில் உள்ள சாக்கடை நீரை கரண்டி மூலம் பிரியாணியில் ஊற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

வாட்ஸ் அப்பில் பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது பல்வேறு யூடியூப் பக்கங்களிலும் பாய் கடை பிரியாணி டேஸ்டாக இருப்பதன் ரகசியம் என்று குறிப்பிட்டு இந்த வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால் இந்த வீடியோ உண்மையா என்பதை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

image.png


இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரவி வரும் வீடியோவின் screenshotகளை HIVE MODERATION இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ, 91.2% AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : ‘விசித்திரமான உயிரினங்கள்’ என்று பரவும் AI வீடியோ!


மாட்டிறைச்சி கடையில் இருந்த பசுமாட்டை வேதனையுடன் பார்த்த மற்றொரு பசுமாடு என்று பரவும் ஏஐ வீடியோ!


முடிவு: 

எனவே, பாய்க்கடை பிரியாணியில் சாக்கடை நீர் கலப்பதாகப் பரவும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க