YouTurn

காரை மாடுகள் உடைப்பது போன்று பரவும் AI வீடியோ!

காரை மாடுகள் உடைப்பது போன்று பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

‘aikalakari’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் மூலம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனை 'Lamborghini' காரை உடைக்கும் மாடுகள் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

நாங்க வர்ற வழியில எவண்டா காரை நிப்பாட்டி வச்சது?  காவி நிறத்தில் கார் இருந்தால் பயப்படுவதற்கு நாங்க என்ன உ பி போலீசா?

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சாலையில் சென்றுக்கொண்டிருந்த  'Lamborghini' காரை மாடுகள் உடைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது aikalaakari என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் அக்டோபர் 4 அன்று, “Angry cow damages a Lamborghini in India!” என்ற குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் அந்த பக்கத்தின் பயனர் மூலம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ  என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்த, பரவி வரும் வீடியோவின் screenshotகளை 'Was It AI' இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் இந்த வீடியோ,  AI மூலம் உருவாக்கப்பட்டது தான் என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : 

மேக வெடிப்புக் காட்சிகள் என்று கூறி பரவி வரும் AI வீடியோ!


நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் என்று பரவும் AI வீடியோ!


முடிவு: 

எனவே, ‘aikalakari’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் மூலம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ இது. இதனை 'Lamborghini' காரை உடைக்கும் மாடுகள் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க