YouTurn

தவெக நிர்வாகிகள் மது பாட்டில்களுடன் இருப்பது போல் பரவும் AI புகைப்படம்!

தவெக நிர்வாகிகள் மது பாட்டில்களுடன் இருப்பது போல் பரவும் AI புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. அதில், கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்களுடன் இருப்பது போன்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) போலியாக புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.

பரவிய செய்தி

படை வீரர்கள் உற்சாகத்திற்கு குளு குளு சாராயம் 

image.png

X Link / Archived Link 

விரிவான விளக்கம்

சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. அதில், கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்களுடன் இருப்பது போன்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். இந்த புகைப்படம் குறித்தான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. 


இதையடுத்து பரவி வரும் புகைப்படத்தை கூர்ந்து கவனிக்கையில், ஒவ்வொருவருக்கும் அருகருகே இரண்டு கைகள் இருப்பதை காண முடிந்தது. அதேபோல் தடுப்பு வேலிகளிலிருந்த கம்பிகள் உட்கார்ந்திருந்தவர்களின் உடலில் ஊருடுவி வெளியே வந்திருந்ததையும் தெளிவாக பார்க்கமுடிந்தது. 


இந்நிலையில் இந்த வீடியோ  ஏஐ மூலம் வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation, TruthScan போன்ற செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது. 


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க : நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் என்று பரவும் AI வீடியோ!


பிரிட்டிஷ் போலீஸ் நாயிக்கு இறுதி சடங்கு என்று பரவும் AI வீடியோ! 


முடிவு: 

எனவே, சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்களுடன் இருப்பது போன்று பரவும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க