யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இலங்கை அதிபர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் சாமி தரிசனம் செய்வதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
பரவிய செய்தி
இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்...
திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது.

விரிவான விளக்கம்
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க துப்பாக்கி பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றார் என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்...👍👍👍👏👏👏
திராவிடியாக்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது. pic.twitter.com/RoPTYq9l1M
உண்மை என்ன?
முதலில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க கோயிலுக்கு சென்றது குறித்து அண்மையில் ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா என்பதை தேடினோம். அப்போது Ada Derana Tamil, Kuruvi போன்ற இலங்கை ஊடகங்களில் ”நயினை அம்மனை வழிபட்ட ஜனாதிபதி” என்று குறிப்பிட்டு ஜனவரி 16, 2026 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சென்று வழிபாடுகளை மேற்கொண்டார் என்றும், தொடர்ந்து, நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார் எனவும் குறிப்பிட்டிருந்தது.
ஆனால் செய்தியில் வெளியாகி உள்ள புகைப்படங்களுக்கும், பரவி வரும் புகைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதையடுத்து இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றே சந்தேகம் எழுந்தது.
இதை உறுதி செய்ய பரவி வரும் புகைப்படத்தை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம்.ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, 99.9% இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.

முடிவு:
எனவே, இலங்கை அதிபர் கோவிலில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் சாமி தரிசனம் செய்வதாகப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.