யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியாவின் மிக பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணம் வருகின்ற ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த திருமணத்தை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்த அம்பானி குடும்பம் கடந்த மார்ச் மாதத்தில் அதற்காக, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட (pre wedding celebration) நிகழ்வொன்றை குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் இந்தியா முழுவதிலும் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை ஒன்றை அணிதிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், ஆனந்த் அம்பானி என்ற பெயரில் இயங்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "செயற்கை நுண்ணறிவின் (AI) அழகு" என்று குறிப்பிட்டு இதே புகைப்படத்தை ஜூன் 01 அன்று பதிவு செய்திருந்ததைக் காண முடிந்தது.
மேலும் இது உண்மையில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படம் தானா என்பது குறித்து அறிய hivemoderation இணையதளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்து பார்த்தோம்.. இந்த புகைப்படம் 99.9% செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கபட்டது என்பதை உறுதிசெய்ய முடிந்தது.

எனவே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சிலர் உண்மையான புகைப்படம் என்று நினைத்து சமூக ஊடக பக்கங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட வீரர்கள் எனத் தவறாகப் பரப்பப்படும் AI படம் !
இதற்கு முன்பும் AI புகைப்படங்களை உண்மையான புகைப்படங்கள் என்று நினைத்து தவறாகப் பரப்பினர். அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: அயோத்தி மற்றும் பனாரஸ் ரயில் நிலையம் எனப் பரவும் AI படங்கள் !
முடிவு:
நம் தேடலில், ஆனந்த் அம்பானியின் தங்க ஆடை குறித்து சமூக ஊடகத்தில் பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.