YouTurn

எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் ராகுல் காந்தி இருப்பது போன்று பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் ராகுல் காந்தி இருப்பது போன்று பரவும் புகைப்படம்.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படமும் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

எப்ஸ்டீன் பைல்ஸ் இல் ராகுல் பாய் பெயர் நான்கு முறைக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக தகவல்!!



Facebook Link | Archive Link 

விரிவான விளக்கம்

ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற அமெரிக்க நிதி முதலீட்டாளர், பாலியல் குற்றத்திற்காகவும், குழந்தைகள் உட்பட பல பெண்களை கடத்தி பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுத்தியதற்காகவும் தண்டனை விதிக்கப்பட்டவர். சமீபத்தில், எப்ஸ்டீன் சேமித்து வைத்திருந்த கோப்புகள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் ஆகியவை அடங்கிய கோப்புகள் "எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files)" என்ற பெயரில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டன. எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது இந்தியாவில் பெரும் விமர்சனத்தை உண்டாக்கியிருந்தது.


இந்நிலையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அப்பதிவுகளில் ராகுல் காந்தியின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் நான்கு முறை வந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயர் 4 முறை வந்துள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை. 


இது குறித்து ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் ஆய்வு செய்து பார்த்ததில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து மூன்று கோப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவை அனைத்துமே ஜெஃப்ரி எப்ஸ்டீன், மற்றவர்களுக்கு அனுப்பிய செய்தித் தாள்களில்/கட்டுரைகளில் ராகுல் காந்தி குறித்து குறிப்பிடப்பட்டிருந்த செய்திகளே. மற்றொரு கோப்பில் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டிருப்பது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்ல, 'CreditSights' என்ற நிதி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் ராகுல்காந்தி. 



இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 'எப்ஸ்டீன் கோப்புகளில்’ காங்கிரஸ் தலைவர்கள் பெயர்கள் இருந்ததாக சொல்லும் ‘தமிழ் ஜனம்’! உண்மை என்ன?

இதே போன்று ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பது போன்று பரவும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், ராகுல் காந்திக்கு பதில் இதே புகைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருப்பது போன்றும் பரப்பப்பட்டு வருவதை காண முடிந்தது. 


#मोदी_जी का विरोध करना मतलब देश का विरोध करना जो मोदी जी का विरोध करेगा वो #देशद्रोही होगा और वो देशभक्त नहीं हो सकता फिर मोदी जी लाए दलितों पिछड़ों को मूर्ख बनने के लिए #UGC बिल जो देशभक्ति का प्रमाण पत्र दूसरों… pic.twitter.com/4owUcFJgib

— Chandan Singh Yadav (@Chandanmgs123) February 9, 2026


பரவி வரும் புகைப்படத்தை “Undetectable“ இணையதளப் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் ராகுல் காந்தி இருப்பது போன்று பரவும் புகைப்படம், AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்பதை அறிய முடிந்தது. 



இதே போன்று, ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் நரேந்திர மோடி இருப்பது போன்று பரவும் புகைப்படமும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதே.  



முடிவு: 


நம் தேடலில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் ஒரு பெண்ணுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பது போன்று பரவும் புகைப்படம் போலியானது என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க