YouTurn

இந்து கோவில்களை கட்டுவோம் என்று ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக பரவும் Deep Fake வீடியோ!

இந்து கோவில்களை கட்டுவோம் என்று ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாக பரவும் Deep Fake வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்து கோவில்கள் கட்டுவது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்தியாவுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், “ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்து வரும் மோதல்கள், ஆப்கானிஸ்தானில் இந்திய முதலீடுக்கான அழைப்புகள்” உள்ளிட்டவை குறித்தே பேசியுள்ளார்.

பரவிய செய்தி

ஆப்கானில் சிவன், விஷ்ணு ஆலயங்கள் கட்டக்கூட தயார்..! அல்லாவை போல ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடுவோம்: அமீர் முத்தாக்கி

image.png

Website Link | Archived Link

விரிவான விளக்கம்

தலிபான் அரசு சார்பில் முதன்முறையாக வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி, ஆறு நாள் அரசுமுறை பயணமாக, அக்டோபர் 9ம் தேதி டில்லி வந்தார். அப்போது அவர் ‘நட்பு நாடான இந்தியா தரும் பணத்தில் சிவன், விஷ்ணு ஆலயங்கள் கட்ட கூட தயாரக உள்ளோம், அல்லாவை போல ஜெய் ஸ்ரீராம் எனவும் முழங்குவோம்’’ என ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் முத்தாகி தெரிவித்துள்ளதாக தமிழ் Asianet News ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. 


அதே போல் அவர் அப்படி ஹிந்தியில் பேசுவது போன்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் ANI ஊடகத்தின் லோகோ இருந்ததை காணமுடிந்தது. அதன்படி ANI ஊடகத்தின் சமூக வலைதளப்பக்கங்களில் இது தொடர்பான வீடியோ உள்ளதா என்பதை ஆய்வு செய்தோம். அப்போது “Afghan FM Amir Muttaqi speaks on Pakistan conflict, Jaishankar meet, women’s rights, U.S.” என்ற தலைப்பில், டெல்லியில் ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் முத்தாகி செய்தியாளர்களை சந்தித்து குறித்து காணொளி இடம்பெற்றிருந்தது. அதில் அவர் ஹிந்தி மொழி இல்லாமல், தனது சொந்த மொழியிலேயே பேசுகிறார். அதை அருகில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதையும் பார்க்கமுடிந்தது.


இதையடுத்து, PTI ஊடகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தை தனி தனியாக வீடியோவாக வெளியிட்டுயிருந்ததை பார்க்கமுடிந்தது. அதை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தி பார்த்ததில், ​​ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பணத்திற்காக ஆப்கானிஸ்தானில் இந்து கோவில்கள் கட்டுவது பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மாறாக  ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்து வரும் மோதல்கள், ஆப்கானிஸ்தானில் இந்திய முதலீடுக்கான அழைப்புகள் உள்ளிட்டவை குறித்தே பேசியுள்ளார். 


PTI வீடியோக்களை, இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். 


இதையடுத்து பரவி வரும் வீடியோவின் ஒவ்வொரு பகுதியாக screenshot எடுத்து பார்க்கும் போது, பற்கள் மறைந்து மீண்டும் தோன்றுவதும், முக சிதைவுகள் இருப்பதும் தெரியவந்தது. எனவே இது deep fake மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது. 


முடிவு: 

‘‘நட்பு நாடான இந்தியா தரும் பணத்தில் சிவன், விஷ்ணு ஆலயங்கள் கட்ட கூட தயாரக உள்ளோம், அல்லாவை போல ஜெய் ஸ்ரீராம் எனவும் முழங்குவோம்’’ என ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் முத்தாகி தெரிவித்துள்ளதாகப் பரவும் வீடியோ போலியானவை. இது deep fake மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ. இதனை உண்மை என நம்பி, தமிழ் Asianet News போன்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க