YouTurn

நடிகர் பிரகாஷ் ராஜ் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மட்டும் செல்வதாகப் பரவும் தவறான தகவல்!

நடிகர் பிரகாஷ் ராஜ்  கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மட்டும் செல்வதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பிரகாஷ்ராஜ் நாத்திகர் இல்லையா? 

X link | Archive link 

விரிவான விளக்கம்

நடிகர் பிரகாஷ் ராஜ் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்றுள்ளார். அவர் நாத்திகர் இல்லை எனப் புகைப்படம் ஒன்றை சரவண பிரசாத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே படத்தினை பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன ?

பரவக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே படத்தை பிரகாஷ் ராஜ் 2019 பிப்ரவரி மாதம் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்படத்துடன் இந்து கோயில், மசூதி மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கு அவர் சென்ற படங்களையும் பதிவிட்டுள்ளார். 



அப்பதிவில் அனைத்து மதங்களையும் அனைவரும் மதிப்பதும் ஆசீர்வதிக்கப்படுவதும் நமது தேசத்தின் ஆன்மா. அனைவரும் உள்ளடக்கிய இந்தியாவை உறுதி செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மதத்தினரும் மத நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதே அப்பதிவின் நோக்கமாக உள்ளது. 

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் 2017ம் ஆண்டு இந்துத்துவா கும்பலால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது நண்பரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். 

அதற்கு முன்னதாக மக்களைச் சென்று பார்க்கையில் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட படத்தினைத்தான் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு பதிவிட்டுள்ளார். ஆனால், அதில் உள்ள தேவாலய படத்தை மட்டும் மத பிரிவினையைத் தூண்டும் வகையில் தவறான நோக்கத்துடன் பரப்பப்படுகிறது. 

கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு இந்துத்துவா மற்றும் பாஜக கட்சியை விமர்சித்தும் பல மேடைகளில் பிரகாஷ் ராஜ் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவர் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மட்டும் செல்கிறார் எனத் தவறான தகவல் பரப்பப்படுகிறது. 

மேலும் படிக்க : கர்நாடகாவில் பாஜகவிற்கு வாக்களிக்குமாறு நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

இதற்கு முன்னர் பிரகாஷ் ராஜ் குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக மீண்டும் பரவும் போலி நியூஸ் கார்டு !

முடிவு : 

நடிகர் பிரகாஷ் ராஜ் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு மட்டும் செல்கிறார். அவர் நாத்திகர் இல்லை எனப் பரவக் கூடிய தகவல் உண்மை அல்ல. அவர் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக இந்து, முஸ்லிம், சீக்கிய வழிபாட்டு தலங்களுக்கும் மத நல்லிணக்கம் அடிப்படையில் சென்றுள்ளார். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க