யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அன்று பிரதமர் மோடி, இன்று நிதிஷ்குமார் தாக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
இன்று பல்டி பாபு நித்திஷ் குமாருக்கு கன்னத்தில் ஒரு அறை விழுந்து விட்டது. மாற்றம் வேகமாகத் தான் நடக்கிறது..
விரிவான விளக்கம்
கடந்த 2022ஆம் ஆண்டில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு இந்தியா கூட்டணியுடன் கைகோர்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதுவரை அவர் பலமுறை கூட்டணி தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பலமுறை கட்சித் தாவிய நிதிஷ் குமாரை, இளைஞர் ஒருவர் பொதுநிகழ்ச்சி ஒன்றில் கன்னத்தில் அறைந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
*இன்று பல்டி பாபு*
— மகராஜா (@Magaraja2021) July 20, 2024
*நித்திஷ் குமாருக்கு*
*கன்னத்தில் ஒரு*
*அறை விழுந்து*
*விட்டது*
*மாற்றம் வேகமா தான்*
*நடக்குது. pic.twitter.com/2VxCDn4JTi
आरएसएस,भाजपा के साथ जाने का इनाम मिला नीतीश बाबू को!
— Dr.Vilas Kharat (@vilas1818) July 17, 2024
अब बताइए क्या इज्जत बची? pic.twitter.com/DFXLGYETPP
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறியமுடிந்தது.
ANI ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் இதே வீடியோ "பீகார் | பக்தியார்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்க முயன்றார். பின்னர் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்" என்று குறிப்பிட்டு கடந்த 2022 மார்ச் 27 அன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
Bihar | A youth tried to attack CM Nitish Kumar during a program in Bakhtiarpur. The accused was later detained by the Police.
— ANI (@ANI) March 27, 2022
(Viral video) pic.twitter.com/FoTMR3Xq8o
இதே போன்று 'Economic Times' கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதியன்று வெளியிட்டுள்ள செய்தியிலும், பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு "பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பக்தியார்பூரில் நடந்த நிகழ்ச்சியின்போது ஒருவர் தாக்கினார்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், "பக்தியார்பூரில் தனது குழந்தைப் பருவத்தை கழித்த முதல்வர், அப்பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பீகார் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் பரவி வரும் வீடியோ கடந்த 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை கன்னத்தில் அறைந்த இளைஞர் எனப் பரவும் வீடியோ, 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.
