YouTurn

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

போபால் நகரத்தில் பிரபல தாதாவான சுபைர் மௌலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ.

பரவிய செய்தி

 "பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக போலீஸால் கைது செய்யப்பட்ட நபர்கள்" - ’தந்தி டிவி’


போபாலில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட அமைதி மார்க்கத் தினர்.


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் நடந்த மோதலுக்கு பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் நான்கு நபர்களை போலீஸார் கைது செய்து, அடித்து  இழுத்துவரும் வீடியோவை பதிவிட்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக போலீஸால் கைது செய்யப்பட்ட நபர்கள் என்று ’தந்தி டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இவ்வாறு ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பி கைது செய்யப்பட்ட நபர்கள் முஸ்லீம்கள் என்று பாஜகவைச் சேர்ந்தவர் பரப்பி வருகிறார். 



உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘THE FREE PRESS JOURNAL’ செய்தித்தளத்தில் இது குறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ‘பிரபல தாதாவான ஜூபர் மௌலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை போபால் போலீஸார் கடந்த மே 8ஆம் தேதி இரவில் கைது  செய்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் இது குறித்து தேடியதில், ‘THE TIMES OF INDIA’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதன்படி, “கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த  ஜூபர் மௌலானா-வை டீலா ஜமால்புரா, மங்கல்வாரா, கவுதம் நகர், ஹனுமங்கஞ்ச் ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் கூட்டு முயற்சியால் பிடித்துள்ளனர்” என்று தெரியவருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை தெருக்களில் அழைத்துச் சென்றிருக்கிறது போலிஸ். 



மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் வீடியோவில் கைது செய்யப்பட்டிருப்பது வெகு நாட்களாக தேடப்பட்ட வந்த பிரபலமான தாதா ஜூபர் மௌலானா என்பது தெரியவருகிறது. இந்த வீடியோவிற்கும் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது தெளிவாகிறது. 


முடிவு:


பிரபல தாதாவான ஜூபர் மௌலானா மற்றும் மூன்று கூட்டாளிகளை கைது செய்து தெருக்களில் அழைத்துச் செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட நபர்கள் என்று ’தந்தி டிவி’ தவறான செய்தி வெளியிட்டிருக்கிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க