YouTurn

ராகுல் காந்தியை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி, பாஜக முதலமைச்சருடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

ராகுல் காந்தியை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி, பாஜக முதலமைச்சருடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மகாராஷ்டிராவைச் சார்ந்த உதய் லலித், உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றதையடுத்து, கடந்த 2022 செப்டம்பர் 11 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மகாராஷ்டிராவைவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அப்போதைய பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பரவிய செய்தி

இருவருக்கும் நடுவில் இருப்பவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா.. இது போன்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவு பெற்ற நீதிபதிகள் இருந்தால், ராகுல் காந்திக்கு மட்டுமின்றி பாஜகவை எதிர்கிற அனைவருக்கும் தேச பக்தி பாடம் எடுப்பார்கள்..

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக பேசிய ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடுமையான கருத்துக்களை வெளியிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தாவுடன் மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ”இருவருக்கும் நடுவில் இருப்பவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா. இது போன்ற ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவு பெற்ற நீதிபதிகள் இருந்தால் 

ராகுல் காந்திக்கு மட்டுமின்றி பாஜகவை எதிர்கிற அனைவருக்கும் தேச பக்தி பாடம் எடுப்பார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது செப்டம்பர் 11,2022 அன்று, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த உதய் லலித் உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதிவியேற்றார். இதைத் தொடர்ந்து பம்பாய் உயர்நீதிமன்றம் சார்பில் நடந்த பாராட்டு விழாவின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். 


இது குறித்து மேலும் தேடி பார்க்கையில், செப்டம்பர் 12, 2022 அன்று மகாராஷ்டிரா ஊடகமான Agrowon ஊடகத்தில் ”ஏக்நாத் ஷிண்டே: தலைமை நீதிபதியின் பாராட்டு விழா குறித்து சர்ச்சை” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் ஹோட்டல் தாஜ் பேலஸில் மும்பை உயர் நீதிமன்றத்தால் தலைமை நீதிபதி உதய் லலித்துக்கு பாராட்டு விழா நடைபெற்றதாகவும், முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா ஆகியோர் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மாநில அரசின் அரசியல் நெருக்கடி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தலைமை நீதிபதியின் பாராட்டு விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எப்படி கலந்து கொள்ளமுடியும் என்று எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png

எனவே இது முழுக்க முழுக்க பம்பாய் உயர் நீதிமன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியாகும். அந்த புகைப்படத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அவரது மனைவியின் படத்தை மட்டும் நீக்கிவிட்டு தவறான நோக்கத்தோடு சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். 


முடிவு:

நம் தேடலில், ராகுல் காந்தியை விமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, பாஜக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்று பரவும் புகைப்படம் தவறானது. இது 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க