YouTurn

'பிகாரில் தேர்தல் ஆணையரின் வீடு முற்றுகை' எனப் பரவும் தவறான காணொளி!

'பிகாரில் தேர்தல் ஆணையரின் வீடு முற்றுகை' எனப் பரவும் தவறான காணொளி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிகாரில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் காணொளியை தவறுதலாக தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி பரப்பி வருகின்றனர்

பரவிய செய்தி

முழு பீகாரும் தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளது.



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

பிகாரில் அமோக வெற்றியுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. பிகார் தேர்தல் முடிவையடுத்து, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவுக்கு எதிரான பரவலான போராட்டங்களை சித்தரிக்கும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.


அந்த வரிசையில் தற்போது, பிகார் தேர்தல் ஆணையரின் வீட்டை மக்கள் முற்றுகையிடும் காட்சி என்று கூறி 17 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. வீடியோவில் தடுப்பு சுவரை மீறி பொதுமக்கள் உள்ளே நுழைவது போன்ற காட்சிகளைத் தெளிவகாக் காண முடிகிறது. 



இதே போன்று, பரவி வரும் வீடியோ “பிகார் தேர்தல் முடிவுக்கு பின்பு, எதிர்க்கட்சியான RJD ஆதரவாளர்கள் 'வாக்கு திருட்டுக்கு' எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று குறிப்பிட்டும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ச்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே சமூக ஊடகங்களில் “RJD“ என்று குறிப்பிட்டு இந்த வீடியோ வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 



மேலும் இதே இடத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ, பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் போஜ்புரி பாடகரும் நடிகருமான கேசரி லால் யாதவின் தேர்தல் பேரணியின் காணொளி என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Obada Malik (@hasan.obada)


எனவே பரவி வரும் வீடியோவில் உள்ள இடம் குறித்து “Google Map”-ல் ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில், பீகாரில் அமைந்துள்ள "காங்கிரைதா உயர்நிலைப் பள்ளி" இது என்பதை அறிய முடிந்தது. 



இந்நிலையில், காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோவை, பீகாரில் தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். மேலும் பரவி வரும் வீடியோ பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பிருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது. 


முடிவு: 


நம் தேடலில், பீகாரில் உள்ள காங்கிரைதா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்தல் பேரணியின் காணொளியை தவறுதலாக தேர்தல் ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறி பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க