YouTurn

மது போதையில் இருக்கும் தமிழ்நாட்டுப் பெண் எனப் பரவும் உத்தரகாண்ட் வீடியோ!

மது போதையில் இருக்கும் தமிழ்நாட்டுப் பெண் எனப் பரவும் உத்தரகாண்ட் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாம்பூர் என்ற பகுதியில், பெண் ஒருவர் மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாடு என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

"திமுக விற்கிற சாராயத்தை குடித்த தமிழக பெண்களின் அவலநிலையை பாரீர். திகார் ராணி கனிமொழியே, உன் அண்ணன் ச்டாலின் ஆட்சியில் திமுக குடும்பங்கள் தயாரித்து விற்கும் சாராயத்தை குடித்து விட்டு அவமானம் பட்டு கிடக்கும் இந்த பெண்கள் உன் கண்ணுக்கு தெரியலையா? கண் இருந்தும் குருடாகலாமா?"

Archived Link

விரிவான விளக்கம்

மது போதையில் இருக்கும் தமிழ்நாட்டுப் பெண் எனக்கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஒரு பெண் சாலையோரம் திடீரென கீழே விழுவதும், அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி விட செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த பதிவில் திமுக விற்கும் சாராயத்தை குடித்த தமிழக பெண்களின் அவலநிலையை பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது karan_moto_vlogger08 என்ற யூடியூப் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் 21 ஜூன், 2025 அன்று "Girl accident" என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை காணமுடிந்தது.


அந்த வீடியோவில் ஹிந்தியில் பேசுவதை பார்க்கமுடிந்தது. அதை மொழிபெயர்ப்பு செய்து கேட்டப்போது, “அந்த வீடியோ எடுக்கும் நபர் காவல்துறைக்கு முதலில் தகவல் அளிக்கிறார். பின்பு அருகில் இருந்த கடைக்காரரிடம் இது எந்த இடம் என்று கேட்டபோது, இது சாம்பூர் என்று கூறுவதையும் கேட்கமுடிந்தது.”


இதையடுத்து அந்த யூடியூப் சேனலை ஆய்வு செய்து பார்த்தபோது, பைக்கில் டூர் செல்லும் பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றிருந்ததை காணமுந்தது. மேலும் அந்த யூடியூப் பக்கத்தில், ஒரு இன்ஸாகிராம் பக்கத்தின் லிங் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதை கிளிக் செய்து பார்த்தப்போது, karan_moto_vlogger08 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் உள்ள bioவில் தன் பெயர் கரண் என்றும், தான் அரித்துவாரை சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுருந்தது. 


அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூன் 19 அன்று, "Over drink" என்ற தலைப்பில் பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. எனவே இந்த வீடியோ  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாம்பூர் என்ற பகுதியில் எடுக்கப்பட்டது உறுதியானது. 


முடிவு: 

நம் ஆய்வில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாம்பூர் என்ற பகுதியில், பெண் ஒருவர் மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை தமிழ்நாடு என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க