YouTurn

சிந்து நதியின் மீதான பாகிஸ்தானின் உரிமையை டிரம்ப் கிண்டல் செய்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

சிந்து நதியின் மீதான பாகிஸ்தானின் உரிமையை டிரம்ப் கிண்டல் செய்ததாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப் தனது சக வேட்பாளரான மார்கோ ரூபியோவை கிண்டல் செய்த போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

🔥இந்த டிரம்ப் இருக்காரே, நக்கல் புடிச்ச மனுஷன்

பாக்கிஸ்தான் சிந்து தண்ணீர் வேணும் என்று அமெரிக்கா கிட்ட கெஞ்சியதை, எப்படி நக்கல் பன்றார் பாருங்க மக்களே

நமது பிரதமரின் வலிமை இப்ப தெரியுதா

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்னும் சுற்றுலாத்தளத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 28 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இடையில் 6 நதிகள் மூலம் தண்ணீர் பகிர்ந்தளிக்கும் 'சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை' இடைநிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்தது. 1960ஆம் ஆண்டு போடப்பட்ட 'சிந்து நதி நீர் ஒப்பந்தம்' இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையில் போர் நடைபெற்ற போது கூட நிறுத்தப்பட்டதில்லை. ஆனால் தற்போது

பாகிஸ்தான் அரசு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக சொல்லி இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்திருக்கிறது. 


இந்நிலையில், சிந்து நதி நீர் பற்றி பாகிஸ்தான் அமெரிக்காவிடம் முறையிட்டதாகவும், அதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக மேடையிலே கிண்டல் செய்ததாகவும் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன? 

பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், 'CNN' செய்தி ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 

2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், டொனால்ட் டிரம்ப்  பாட்டிலிருந்த தண்ணீரை கூட்டத்தை நோக்கி தொளித்து பாட்டிலை தூக்கி எறிந்துவிட்டு 'It's Rubio'  என்று சொல்கிறார்.


இது குறித்து தேடிய போது, மார்கோ ரூபியோ என்ற அமெரிக்க அரசியல்வாதி 2013ஆம் ஆண்டு தேசிய தொலைக்காட்சி முன்பு பேசிக்கொண்டு இருக்கும் போது தண்ணீர் குடிப்பதற்காக இடையில் சில நொடிகள் பேச்சை நிறுத்தினார். இது அன்றைய காலத்தில் அமெரிக்காவில் பேசு பொருளானது. 

2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இதனை மேடையில் நடத்திக்காட்டி மார்கோ ரூபியோவை கிண்டல் செய்தார் டொனால்ட் டிரம்ப். 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த வீடியோ 2016ஆம் ஆண்டு டிரம்ப் தனது சக  வேட்பாளரை கிண்டல் செய்த போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. 


முடிவு: 

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது சக  வேட்பாளரான மார்கோ ரூபியோவை கிண்டல் செய்த வீடியோவை திரித்து, தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதுடன் இணைத்து தவறாக பரப்புகின்றனர்.



பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க