யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவர் அரசு வழக்கறிஞர் RC Kodekar ஆகும். இவர் வாதத்தின் பேரில் தான், கோத்ரா அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக் பதுக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பரவிய செய்தி
இவன் ரஃபீக் உசேன் பாதுக், கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்... 23 வருடங்களுக்கு முன்பாக குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயிலை எரிக்க இலவசமாக பெட்ரோல் கொடுத்த
இந்த ஜிஹாதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ...

விரிவான விளக்கம்
குஜராத் மாநிலம், கோத்ரா பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சபர்மதி விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்த ரயிலில் இருந்த 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பயங்கரமான மதக் கலவரம் ஏற்பட்டது.
இந்நிலையில் 23 வருடங்களுக்கு முன்பாக கோத்ரா ரயில் நிலையத்தில் ரயிலை எரிக்க இலவசமாக பெட்ரோல் கொடுத்த ரஃபீக் உசேன் பதுக் என்று புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
இவன் ரஃபீக் உசேன் பாதுக், கோத்ராவில் இரண்டு பெட்ரோல் பம்புகளின் உரிமையாளரும் ஒரு துலுக்க இயக்க தலைவருமானவன்... 23 வருடங்களுக்கு முன்பாக குஜராத் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயிலை எரிக்க இலவசமாக பெட்ரோல் கொடுத்த
இந்த ஜிஹாதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ... 1/1 pic.twitter.com/hSN1SEJgEP
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ANI Bharat யூடியூப் பக்கத்தில் ஜூலை 3, 2022 அன்று வெளியிட்ட செய்தி ஒன்றைப் பார்க்க முடிந்தது. அதில் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் நபர் இருப்பதைப் பார்க்க முடிந்தது. மேலும் அந்த காணொளியில் காணப்படுபவரின் பெயர், ஆர்.சி. கோடேகர் என்றும், அவர் ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இவர் குறித்துத் தேடிய போது, அவரது மகனும், குஜராத் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான நச்சிகேத் ஆர்.கோடேகர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த புகைப்படம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் இந்தப் புகைப்படத்தில் உள்ளவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் ஆர்.சி. கோடேகர் என்றும், இவர் வாதத்தின் பேரில் தான், கோத்ரா அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக் பதுக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
This photo is of Shri RC Kodekar Public Prosecutor Gujarat High Court, upon his argument the sessions court of Godhra given life imprisonment to accused Rafik Bhatuk. pic.twitter.com/QPpn3B0RLR
அதே போல் ”2002 Godhra train fire accused gets life term” என்ற தலைப்பில் ஜூலை 4, 2022 அன்று Hindustan Times வெளியிட்ட செய்தி ஒன்றைப் பார்க்க முடிந்தது. அதில் 19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ரஃபீக் உசேன் பதுக்கைக் குஜராத் காவல்துறை பிப்ரவரி 14,2021 அன்று கைது செய்தது என்றும், ரஃபீக் உசேன் பதுக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து கோத்ரா அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகச் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர் தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் கூகுளில் rc kodekar public prosecutor என்று தேடிய போதும், பரவி வரும் புகைப்படத்தை மட்டுமே காணமுடிந்தது.
முடிவு :
நம் தேடலில், குஜராஜ் உயர்நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர் புகைப்படத்தை, கோத்ரா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரஃபீக் உசேன் பதுக் என்று தவறாக பரப்புகின்றனர். எனவே ரஃபீக் உசேன் பதுக் என்று பரவி வரும் புகைப்படம் உண்மையானது அல்ல.