YouTurn

ராகுல்காந்தியை தலைகுனிந்து வணங்கும் உத்தவ் தாக்கரே எனப் பரவும் போலியான புகைப்படம்!

ராகுல்காந்தியை தலைகுனிந்து வணங்கும் உத்தவ் தாக்கரே எனப் பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மாகாராஸ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவரான எம்பி ராகுல் காந்தியின் முன் கைகூப்பியபடி குனிந்து வணங்குவதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

காங்கிரசை நடுங்க வைத்த மராத்திய புலி பாலாசாகேப் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயின் பரிதாப நிலை! பாலாசாகேப் தாக்கரே புலிக்கு பிறந்த முதுகெலும்பற்ற, வெட்கமற்ற, பயனற்ற தலைவர்..

X Link | Archive Link


விரிவான விளக்கம்

மகாராஸ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவரான எம்பி ராகுல் காந்தியின் முன் கைகூப்பியபடி குனிந்து வணங்குவதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை “Google Reverse Image Search” பயன்படுத்தி தேடியதில், 'NDTV’ ஆகஸ்ட் 08 அன்று, “சிவசேனா (UBT) தலைவர்கள் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் சஞ்சய் ரவுத் ஆகியோர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோர், மகள் மற்றும் மனைவியைச் சந்தித்தனர். சுனிதா கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்பிக்கள் ராகவ் சதா, சஞ்சய் சிங் ஆகியோரும் உடன் உள்ளனர்” என்று குறிப்பிட்டு இது தொடர்பான புகைப்படங்களை பதிவு செய்திருந்தது.

அதில்  உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோரை குனிந்து கைக்கூப்பி வணங்குவதைக் காண முடிகிறது. 

மேலும் உத்தவ் தாக்கரே, ராகுல்காந்தியை சமீபத்தில் சந்தித்தாரா என்பது குறித்தும் ஆய்வு செய்து பார்த்தோம். உத்தவ் தாக்கரே தனது எக்ஸ் பக்கத்தில் எம்பி ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்ததாகக் குறிப்பிட்டு ஆகஸ்ட் 07 அன்று புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

ஆனால் இதில் எங்கும்  உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியை குனிந்து கைக்கூப்பி வணங்குவது போன்று எந்த புகைப்படங்களும் இல்லை. 

மேலும் இது குறித்து ஆய்வு செய்தததில், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோரை குனிந்து கைக்கூப்பி வணங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, ராகுல்காந்தியை சமீபத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் எடிட் செய்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதை அறிய முடிந்தது. 

முடிவு:

நம் தேடலில், மகாராஸ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவரான எம்பி ராகுல் காந்தியின் முன் கைகூப்பியபடி குனிந்து வணங்குவதைப் பாருங்கள் என்று கூறி பரவும் புகைப்படம் போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.