YouTurn

தமிழகத்தில் லோக் ஆயுக்தா செயல்படுகிறதா? அர்ஜூன் சம்பத் எழுப்பிய கேள்வி!

தமிழகத்தில் லோக் ஆயுக்தா செயல்படுகிறதா? அர்ஜூன் சம்பத் எழுப்பிய கேள்வி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

லோக் ஆயுக்தா மூலம் 2019-ல் 78 வழக்குகளும், 2020-ல் 167 வழக்குகளும், 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகள் முறையே 144, 56, 84 மற்றும் 88 வழக்குகளும் இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளன.

பரவிய செய்தி

#தமிழகத்தில் லோக்ஆயுக்தா செயல்படுகிறதா? தமிழக அரசு அதிகாரிகள் சொத்து பட்டியல் வெளியிட்டுள்ளார்களா? தமிழக லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்களா?

X Link | Archived Link

விரிவான விளக்கம்

கர்நாடகாவில் 8 அதிகாரிகள் வீடுகளில் ரூ.35 கோடி பறிமுதல் என்ற செய்தித்தாளின் பக்கத்தை பகிர்ந்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் லோக் ஆயுக்தா செயல்படுகிறதா என்றும், தமிழக அரசு அதிகாரிகள் சொத்து பட்டியல் வெளியிட்டுள்ளார்களா? என்றும், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 


உண்மை என்ன? 

லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசாரணை மன்றம். இதில், ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அந்த நால்வரில் இருவர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 


இதையடுத்து தமிழகத்தில் லோக்ஆயுக்தா செயல்படுகிறதா? என அர்ஜூன் சம்பத் பதிவிட்டதை பற்றி தேடி பார்த்தோம். அப்போது பிப்ரவரி 20, 2025 அன்று தினத்தந்தியில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை, தமிழக அரசு நியமனம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா செயல்படுவது உறுதியானது. 

image.png


மேலும் இதில் தமிழக லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனரா என்று அர்ஜூன் சம்பத் எழுப்பியிருக்கும் கேள்வி குறித்து தேடி பார்த்தோம். அப்போது tamilnadulokayukta. Tn. gov .in என்ற இணையத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல்புகார்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதில் 2019ஆம் ஆண்டு 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2020ல் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 167 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2024 வரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், எத்தனை வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. 


முடிவு : 

கர்நாடகாவை போல் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா செயல்படவில்லையா என இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் எழுப்பிய கேள்விக்கு பதில் கிடைத்தது.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க