YouTurn

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழிச்சாலை எனப்பரவும் AI தொழில்நுட்ப புகைப்படம்!

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழிச்சாலை எனப்பரவும்  AI தொழில்நுட்ப புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்படுகின்றது

பரவிய செய்தி

அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை நமது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை தான்!!!! நடுநடுவே இணைப்பு சாலைகள் கொண்ட இந்த அழகான சாலை ரோடு மாமாந்தூர் தொழில்துறை புறநகர் பகுதியான அரியபெருமானூர், மற்றும் புதிய புறநகர் பகுதியான கிரேட்டர் மூரார்பாளையம் இணைக்கும் 25கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறுவழி விரைவுச்சாலை ஆகும்!!!

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழி சாலை என வாட்சப்பில் பரப்பப்படும் இப்புகைப்படத்தை யூடர்ன் வாசகர் ஒருவர் அனுப்பி இதன் உண்மைத் தன்மை கேட்டிருந்தார்.

உண்மை என்ன?

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறுவழி சாலை எனச் சொல்லப்படும் படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேதியதில், இதே படம் நொய்டா-கிரேட்டர் நொய்டா இணைக்கும் சாலைகள் எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதையும் காண முடிந்தது.

மேலும் பரவிவரும் புகைப்படம் செயற்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவையா என்ற கோணத்தில் தேடினோம். வைராலகும் புகைப்படத்தை Hive moderation மற்றும் sightengine போன்ற இணையதளப்பக்கத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில், இப்புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை எனத் தெரிய வந்தது.


இவற்றிலிருந்து பரப்பப்படும் படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

இது போன்ற AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்பட்ட செய்திகளை நம் யூட்டர்ன்  உண்மையை சரிபார்த்து கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.

மேலும் படிக்க: கும்ப கர்ணனின் வாள் என்று பரப்பப்படும் புகைப்படங்கள்!

மேலும் படிக்க: தங்க ஆடையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் எனப் பரவும் AI புகைப்படம்!

முடிவு:

நம் தேடலின் வாயிலாக பரவி வரும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தவறான தகவலோடு பகிரப்படுகின்றது என்பது தெளிவாகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க