YouTurn

அயோத்தில் 25000 ஹோம குண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன எனப் பரவும் பழைய வாரணாசி வீடியோ !

அயோத்தில் 25000 ஹோம குண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன எனப் பரவும் பழைய வாரணாசி வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தை மாதத்தில் அயோத்தியில் ஸ்ரீ ராமர் பிறந்த அதே இடத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை ஒட்டி 25000 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன ஜெய் ஸ்ரீ ராம்..



Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

யோத்தி ராமர் கோவில் வருகின்ற ஜனவரி 22 அன்று மிக பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக 25000 ஹோம குண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன என்று கூறி 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில், திறந்த வெளியில் பல ஹோம குண்டங்கள் வரிசையாக அமைக்கப்பட்டிருப்பதையும், இடை இடையே, ஓம் என்று ஹிந்தியில் குறிக்கப்பட்ட கொடிகள் நடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ அயோத்தியில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

கடந்த 2023 டிசம்பர் 17 அன்று Arun village boy vlog என்ற யூடியூப் பக்கத்தில் இதே வீடியோ "ஸ்வார்வெத் மகாமந்திர் தாம்.! வாரணாசி 25000 ஹஜர் ஹவன் குண்டம் " என்ற தலைப்பில் பதிவாகி உள்ளதை காண முடிந்தது.



இதே போன்று மற்றொரு வீடியோவிலும், ஸ்வர்வேத் மஹாமந்திர் தம் கோவிலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு, 25000 ஹோம குண்டங்களை காட்டும் வீடியோ ஒன்று பதிவாகி உள்ளது.



எனவே இந்தக் காட்சிகளை ஒப்பீடு செய்து பார்த்ததில், இவை இரண்டும் பொருந்துவதை உறுதிப்படுத்த முடிகிறது. இதன் மூலம் பரவி வரும் வீடியோ வாரணாசியில் எடுக்கப்பட்டது என்பது தெளிவானது.



மேலும் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வர்வேத் மஹாமந்திர் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்தது குறித்து, ஒன்றிய அரசின் PIB செய்திப்பிரிவு, 2023 டிசம்பர் 18 அன்று செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிந்தது. அதிலும், ஸ்வர்வேத் மஹாமந்திர் திறப்பு விழாவிற்கு 25000 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.



முடிவு:

நம் தேடலில், அயோத்தில் 25000 ஹோம குண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன எனப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், இது வாரணாசியில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க