YouTurn

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர் வீடியோ 2025ஆம் ஆண்டு நடந்ததாக பரப்பப்படுகிறது!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத் தொடர் வீடியோ 2025ஆம் ஆண்டு நடந்ததாக பரப்பப்படுகிறது!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது மோடி எழுந்து செல்லும் வீடியோ 2024ஆம் ஆண்டு மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

ஐயா ஜி அவர்கள்  அவையை விட்டு ஓடிய தருணம்…


 

X Link

விரிவான விளக்கம்

2025 ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரையிலான காலத்தில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்நிலையில், இந்த மழைக்கால கூட்டத் தொடரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது பிரதமர் நரேந்திர மோடி எழுந்து வெளியே சென்றுவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


 

உண்மை என்ன?

 

‘மஹுவா மொய்த்ரா பேசுகையில்  மோடி எழுந்து சென்றார்’ என்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி, அதனைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.

 

‘India Today’ ஆங்கில செய்தித்தளத்தின் யூட்யூப் பக்கத்தில் 2024 ஜூலை மாதம் வெளியிடப்பட்டிருந்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘மஹுவா மொய்த்ரா தனது பேச்சைக் கேட்கும் படி மோடியிடம் கோரிக்கை வைத்தபோது மோடி எழுந்து சென்றுவிட்டார்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.


 

அந்த வீடியோவில் மஹுவா மொய்த்ரா பேசுகையில் ‘மாண்புமிகு பிரதமர் அவர்களே, நான் பேசுவதை கேட்டுவிட்டு செல்லுங்கள். பயப்படாதீர்கள். நீங்கள் என்னுடைய தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக இரண்டு முறை வந்தீர்கள். இந்த முறையாவது என்னுடைய பேச்சு காது கொடுத்து கேளுங்கள்!’ என்று பேசுகிறார். ஆனால் அவர் பேசுவதை கவனிக்காமல் மோடி எழுந்து செல்கிறார். பின்பு ‘இது என்னுடைய துரதிர்ஷ்டம்' என்று சொல்லிவிட்டு மஹுவா மொய்த்ரா தொடர்ந்து பேசுகிறார்.

 

மேற்கூறிய விவரங்களிலிருந்து, மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது மோடி எழுந்து செல்லும் வீடியோ 2024ஆம் ஆண்டு மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

 

முடிவு:

 

மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் பேசும் போது மோடி எழுந்து செல்லும் வீடியோ உண்மையானது தான். ஆனால் இந்த சம்பவம் 2024ஆம் ஆண்டு நடந்தது. 2025ஆம் ஆண்டில் நடந்தது அல்ல.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க