YouTurn

1983ல் இந்திரா காந்தி தலைமையில் நடந்த G20 மாநாடு எனப் பரவும் தவறான தகவல் !

1983ல் இந்திரா காந்தி தலைமையில் நடந்த G20 மாநாடு எனப் பரவும் தவறான தகவல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி



40 ஆண்டுகளுக்கு முன்பு திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது, ​​நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ​​G20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம்.. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்று நினைப்பவர்கள் கவனிக்கவும்... உலகின் பாதி நாடுகளில் இருந்து




விரிவான விளக்கம்

2023ம் ஆண்டிற்கான G20 உச்சிமாநாட்டின் 18வது கூட்டம் இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் கடந்த செப்டம்பர் 9-10 அன்று நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் முதல் G20 உச்சிமாநாடு இது என சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த 1983லேயே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் G20 மாநாடு நடத்தப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் மற்ற நாடுகளின் தலைவர்களை இந்திரா காந்தி வரவேற்பது போல காட்சிகள் இடம்பெற்று உள்ளன.



Archive Link:



Archive Link:

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், ‘Har Haagh Shakti’ என்ற முகநூல் பக்கத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவின் முழு தொகுப்பு கடந்த செப்டம்பர் 07 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

மேலும் அதில் "7வது குழுவின் முழுமையான உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியது (1983)மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. நாட்டின் மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. இது G20 ஐ விட பெரிய நிகழ்வு." என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதில் G20 மாநாட்டோடு தொடர்புடையது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.



மேலும் இதே போன்று AP Archive என்ற யூடியூப் சேனலிலும், வைரல் வீடியோவில் பொருத்தும் காட்சிகளைக் கொண்ட ஒரு வீடியோவைக் கண்டோம். அதில் வீடியோவின் தலைப்பு, "GS 07 03 1983 அணிசேரா நாடுகளின் மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது" என்றும், வீடியோவின் விளக்கப் பகுதியில் “16 மார்ச் 1983 அணிசேரா நாடுகளின் 7வது உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தொடக்க உரையை நிகழ்த்தி வருகிறார். அப்போது அவர் உரையை முடித்து வெளியேறும் போது கியூபா நாட்டின் ஜனாதிபதியான ஃபிடல் காஸ்ட்ரோ, சுத்தியலை அவரிடம் ஒப்படைத்தார்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதனை, 1983 மார்ச் 31 தேதியிடப்பட்ட இந்தியா டுடே செய்தியிலும் காண முடிந்தது. அதில் 60 நாட்டுத் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் உட்பட 101 நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். இந்த நிகழ்வு 1983 மார்ச் 7-12 வரை இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இதன் மூலம் 1983ல் அணிசேரா இயக்கம் (NAM) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டத்தை இந்திரா காந்தி தலைமையிலான அரசு நடத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் அது G20 உச்சி மாநாட்டோடு தொடர்புடையது அல்ல.


முதன்முதலில் 1999 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் கொண்ட இருபது நாடுகளைக் கொண்ட (G20) குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 2008ல் தான் முதல் G20 உச்சி மாநாடு முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. எனவே கடந்த 1983-இல் இந்திராகாந்தி தலைமையில் G20 உச்சி மாநாடு நடைப்பெற்றதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பது தெளிவாகிறது. 

.


.


.

முடிவு :

நம் தேடலில், கடந்த 1983ல் இந்திராகாந்தி தலைமையில் G20 உச்சி மாநாடு நடைப்பெற்றதாகப் பரவி வரும் வீடியோ அணி சேரா மாநாட்டோடு தொடர்புடையது. இது G20 உச்சி மாநாட்டோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரவி வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க