YouTurn

காங்கிரஸ் கட்சி இங்கிலாந்திடம் அடமானம் வைத்த 100 டன் தங்கத்தை மோடி அரசு மீட்டதாகப் பரவும் தவறான தகவல்!

காங்கிரஸ் கட்சி இங்கிலாந்திடம் அடமானம் வைத்த 100 டன் தங்கத்தை மோடி அரசு மீட்டதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

பாரத மக்களுக்கோர் இன்பசெய்தி. 1991 ல் காங்கிரஸ் அரசு இங்கிலாந்து அரசிடம் அடகு வைத்த இந்திய நாட்டின் 100 டன் தங்கத்தை இன்று மீட்டெடுத்திருக்கிறது நமது நரேந்திர மோடி அவர்களின் அரசு 

விரிவான விளக்கம்

காங்கிரஸ் கட்சி 1991ம் ஆண்டு ஆட்சியில் இருக்கும் போது இந்திய நாட்டின் 100 டன் தங்கத்தை இங்கிலாந்து அரசிடம் அடகு வைத்ததாகவும் அதனை நரேந்திர மோடி தற்போது மீட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வாட்சப்பில் பரப்பப்படுகிறது.



அதில் உள்ள படத்தில், ரிசர்வ் வங்கி 1991க்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவிற்கு அதன் பெட்டகத்திற்கு (vaults) கொண்டு வந்துள்ளது என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



உண்மை என்ன?

இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை மோடி அரசு மீட்டதாகப் பரவக் கூடிய செய்தியில் உள்ள புகைப்படத்தில் ‘The Tatva’ என்கிற லோகோ இருப்பதைக் காண முடிகிறது. அதனைக் கொண்டு இணையத்தில் தேடியதில், அப்பெயரில் இயங்கக் கூடிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இச்செய்தி கடந்த மே, 31ம் தேதி பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 



 










View this post on Instagram























 

A post shared by The Tatva (@thetatvaindia)






மேற்கொண்டு இது குறித்துத் தேடியதில், ’Business Today’ இணைய தளத்தில் இது தொடர்பாக ஜூன் 1ம் தேதி வெளியான கட்டுரை ஒன்று கிடைக்கப்பெற்றது. 1990-91 கால கட்டத்தில் அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது இந்தியா தன்னிடம் இருந்த தங்கத்தை பேங்க ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்து 405 மில்லியன் டாலரை கடனாகப் பெற்றது. பிறகு 1991 நவம்பர் மாதம் இந்த அடமானத்தை இந்திய அரசு மீட்டது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அடமானம் மீட்கப்பட்டாலும் போக்குவரத்து, வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக இவ்வளவு நாள்கள் இந்தியா அங்கேயே தங்கத்தை வைத்திருந்தது. தற்போது சர்வதேச நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகளால் இந்தியா தனக்குச் சொந்தமான தங்கத்தை மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வந்துள்ளது. 

இந்தியாவின் தங்கக் கையிருப்பு பற்றி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை குறித்து ‘Business Standard’ செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் 308.03 டன் தங்கம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது பேங்க் ஆஃப் இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட 100.28 டன் தங்கத்துடன் சேர்த்து, இந்தியாவில் இந்தியாவுக்கு சொந்தமாக தங்க இருப்பு 408.31 டன்னாக உயர்ந்துள்ளது. இது போக இன்னபிற நாடுகளில் இந்தியாவிற்குச் சொந்தமாக 413.79 டன் தங்கம் உள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக இந்தியாவிற்கு 822.1 டன் தங்கம் இருப்பாக உள்ளது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி நெருக்கடி காலகட்டத்தில் (1990-91) அடமானம் வைக்கப்பட்ட தங்கம் காங்கிரஸ் ஆட்சியிலேயே (1991, நவ) மீட்கப்பட்டுவிட்டது. பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் வைக்கப்பட்டிருந்த அத்தங்கம் தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அது தற்போது மோடியின் ஆட்சியில் தான் மீட்கப்பட்டது போல் ஒரு தவறான தகவல் வாட்சப்பில் பரப்பப்படுகிறது.

முடிவு: 

காங்கிரஸ் 1991ல் இங்கிலாந்திடம் அடமானம்  வைத்த 100 டன் தங்கத்தை மோடி அரசு தற்போது மீட்டுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது. அது 1991, நவம்பர் மாதமே மீட்கப்பட்டு விட்டது. பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட அத்தங்கம் தற்போது இந்தியாவிற்கே கொண்டு வரப்பட்டு ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க