YouTurn

இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலியா வீரர் ட்ரவிஸ் குடும்பத்தினர் மீது குவியும் அருவருப்பான கமெண்ட்கள் !

இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலியா வீரர் ட்ரவிஸ் குடும்பத்தினர் மீது குவியும் அருவருப்பான கமெண்ட்கள் !
ந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 240 ரன்களை ஆஸ்திரேலிய அணியினர் 43 ஓவர்களில் அடித்து உலகக்கோப்பையை வென்றனர்.

2023 உலகக்கோப்பை தொடர் தொடங்கியது முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி எந்த போட்டிகளிலும் தோற்காமல் வெற்றி பெற்று வந்தது. ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் பெருமளவு எதிரொலித்து வருகிறது.

இப்போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ட்ரவிஸ் ஹெட் 120  பந்துகளில் 137 ரன்கள் அடித்து தங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளார்.

இந்திய அணியின் தோல்வி காரணமாக, ஆஸ்திரேலியா வீரர் ட்ரவிஸ் ஹெட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறு மற்றும் அவருக்கத்தக்க கமெண்ட்களை சிலர் பதிவிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



ட்ரவிஸ் ஹெட் தனது மனைவி குழந்தை மற்றும் நண்பர்களின் புகைப்படங்கள் உடன் பதிவிட்ட பதிவுகளின் கமெண்ட்களில் நேற்று இரவில் இருந்து அருவருக்கத்தக்க வகையிலும், வெறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றில் பல போலி ஐடிகள், ஒரு சில உண்மையான ஐடிகளில் இருந்து இப்படியான கமெண்ட்கள் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியர்கள் பலரும் அப்பதிவுகளுக்கு எதிராகவும், ட்ரவிஸ் ஹெட்க்கு ஆதரவாகவும் அவரது போஸ்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.



இதற்கிடையில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நேசம், தன்னை ஆஸ்திரேலியா வீரர் என நினைத்துக் கொண்டு இந்திய ஐடிகளில் இருந்து அவதூறு மெசேஜ்கள் வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களிடையே உணர்வுரீதியாக கலந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி தோற்ற நேரங்களில், வீரர்களின் உருவப் படங்களை எரிப்பது, அவர்களின் வீடுகளை தாக்கும் போன்ற பல்வேறு சம்பவங்கள் இங்கு நிகழ்ந்திருக்கிறது.

இதற்கு அடுத்தப்படியாக, தற்போது சமூக வலைதளங்களின் மூலமாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மீது பகிரங்கமாக அவதூறுகளும் வீசப்படுகின்றன. அது சாதாரண ட்ரோல், அச்சுறுத்தலை மீறி பலாத்கார அச்சுறுத்தல் மற்றும் தாக்குவது வரை நீள்கிறது.

மேலும் படிக்க : தோனியின் 5 வயது மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல்| எல்லைமீறும் சமூக வலைதளவாசிகள்!

கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்த போது தோனியின் மகளுக்கு பலாத்கார அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மோசமான சம்பவங்களும் இங்கு அரங்கேறி இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை