YouTurn

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது எல்லாமே லீப் ஆண்டு கிடையாது.. விளக்கம் இதோ !

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது எல்லாமே லீப் ஆண்டு கிடையாது.. விளக்கம் இதோ !
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் சேர்த்து கொள்ளப்படுகிறது, அது தான் பிப்ரவரி 29 என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. ஆம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது எல்லாமே லீப் ஆண்டுகளில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. காரணம் என்ன என்பதை இங்கு தெளிவாகப் பார்ப்போம்.

லீப் ஆண்டுகள் ஏன் தேவை ?

பொதுவாக சூரியனைச் சுற்றி வர பூமிக்குத் தோராயமாக 365.242 நாட்கள் ஆகின்றன. ஆனால் ஒரு வருடத்தில் பொதுவாக 365 நாட்கள் மட்டுமே இருப்பதால், கூடுதலாக உள்ள 0.242 நாட்களைச் சரிசெய்ய, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு முழு நாள் சேர்த்துக்கொள்ளப்படும். அவ்வாறு ஒருநாள் சேர்த்துக்கொள்ளபடாத பட்சத்தில், அந்த ஒருநாள் அடுத்த ஆண்டுடன் சேர்ந்து கொண்டே போகும்.

இறுதியில் அந்த நாட்கள் அனைத்தும் சேர்ந்து மாதக்கணக்கில் மாறும். இறுதியில் கோடை காலத்தில் வர வேண்டிய பருவம் டிசம்பர் மாதத்தில் ஏற்படும் அளவுக்கு கூட பருவநிலை தள்ளிப்போகும். எனவே சரியான காலநிலைகளை கணிக்க 0.242 நாட்களையும் காலண்டரில் சேர்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. எனவே லீப் நாள்(மிகு நாள்) இங்கு கட்டாயம் தேவை.

ஜூலியன் காலண்டர் vs கிரிகோரியன் காலண்டர் :

உலகம் முழுவதும் ஆரம்பத்தில் கிமு 45 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலியன் நாட்காட்டியே பின்பற்றப்பட்டு வந்தது, தற்போது நாம் பயன்படுத்தும் காலண்டரும் இந்த ஜூலியன் காலண்டரின் நீட்சியே. இந்த ஜூலியன் காலண்டரில் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை ஒரு நாள் சேர்க்கப்பட்டு அது லீப் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது துல்லியமாக பூமியின் சுற்றுப்பாதை நேரத்துடன் ஒத்துப்போகவில்லை. 

குறிப்பாக 10 நாட்கள் இயற்கை நிகழ்வுகளுடன் ஒத்துப்போகாமல் இருந்தன. எனவே அப்போது ஆட்சி செய்த மன்னர் "போப் பதிமூன்றாம் கிரிகோரி", 1582 ஆம் ஆண்டில் உள்ள அக்டோபர் மாதத்தில், 4 ஆம் தேதிக்கு பின்னர் நேரடியாக அக்டோபர் 15 தேதி வருமாறு மாற்றுங்கள் என அறிவித்து, புதிதாக கிரிகோரியன் காலண்டரையும் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்படியே கிரிகோரியன் காலண்டரில் லீப் ஆண்டு கணக்கிடும் முறை திருத்தப்பட்டு, புதிய லீப் முறை கொண்டு வரப்பட்டது.

லீப் நாள் புதிய முறையில் எவ்வாறு கணக்கிடப்படும் ?

ஜூலியன் நாட்காட்டி படி, லீப் நாள் என்பது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும், ஒரு நாள் கூடுதலாக சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பிப்ரவரியில் வழக்கமான 28 நாட்களுக்குப் பதிலாக, 29 நாட்களைக் கொண்டதாக பிப்ரவரி மாதம் இருக்கும்.

ஆனால் கிரிகோரியன் காலண்டரில், நூற்றாண்டுகள் வரும் போது மட்டும் அவை நான்கால் வகுபட்டாலுமே அவை லீப் ஆண்டாக சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. மாறாக ஒவ்வொரு நூற்றாண்டும், 400 ஆல் வகுபட்டால் மட்டுமே அது லீப் ஆண்டாக சேர்த்துக்கொள்ளப்படும்.

உதாரணமாக 1700, 1800 மற்றும் 1900 ஆகியவை 4 ஆல் வகுபட்டாலும் இவை லீப் ஆண்டுகளில் வராது. ஏனெனில் 1700, 1800 மற்றும் 1900 ஆகியவை 400 ஆல் வகுபடாதவை. இதே போன்று வருங்காலத்தில் வரும் 2100 ஆம் ஆண்டும் லீப் ஆண்டில் சேர்க்கப்பட மாட்டாது.

ஆதாரங்கள்:

https://economictimes.indiatimes.com/news/how-to/2024-leap-year-what-is-leap-year-why-it-comes-in-february-and-how-its-calculated-here-is-all-you-should-know/articleshow/106445410.cms?from=mdr

https://www.britannica.com/science/leap-year-calendar
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை