ஆந்திர ரயில் விபத்தின் போது லோகோ பைலட்டுகள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததாக பொய் பரப்பிய ரயில்வே அமைச்சர்!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அக்டோபர் 29, 2023 அன்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில், குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். குண்டூரில் இருந்து ராயக்கட்டா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே நேரத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா சென்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது
அக்டோபர் 29, 2023 அன்று 14 பேரின் இறப்புக்கு காரணமான ரயிலை ஓட்டிய ஓட்டுநரும், உதவி ஓட்டுநரும் தங்களது மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்ததாலேயே ரயில் விபத்து ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த மார்ச் மாதம் விபத்துக்கான காரணம் குறித்த விவாதம் ஒன்றில் போது பேசியிருந்தார். இந்நிலையில் அவரது பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவதைக் காண முடிகிறது.

மேலும் ரயில்வே அமைச்சரின் உரையில் “சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஒரு ரயில் விபத்து, கிரிக்கெட் போட்டி ஒன்றின் காரணமாக லோகோ பைலட் மற்றும் கோ-பைலட் இருவரும் திசை திருப்பப்பட்டதால் நடந்தது. இப்போது நாங்கள் அத்தகைய கவனச்சிதறலைக் கண்டறியும் அமைப்புகளை நிறுவி வருகிறோம். மேலும் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுனர்கள் ரயிலை இயக்குவதில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதிசெய்கிறோம்” என்றும் வைஷ்ணவ் கூறியிருந்தார்.
ஆதாரம் இன்றி தவறான செய்திகளை கூறிய ரயில்வே அமைச்சர்:
ஒன்றிய ரயில்வே அமைச்சர் ஆந்திர ரயில் விபத்து குறித்து கூறிய செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து தி இந்து ஏப்ரல் 27 அன்று "ரயில்வே அமைச்சர் கூறியது போல் ஆந்திர ரயில் விபத்தின் போது லோகோ பைலட்டுகள் கிரிக்கெட் பார்த்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதில், "கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ஆதாரங்களின்படி, லோகோ பைலட் எஸ்எம்எஸ் ராவ் மற்றும் அசிஸ்டன்ட் லோகோ பைலட் எஸ். சிரஞ்சீவி இருவரும் பயன்படுத்திய மொபைல் போன்களில் இணைய பயன்பாட்டை பகுப்பாய்வு செய்தோம். விபத்தில் இறந்த இருவரும் - அவர்கள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அழைப்பு விவரங்கள் மற்றும் இணைய பயன்பாடு ஆகியவை மூத்த அதிகாரிகள், தொலைத்தொடர்பு பொறியாளர் மற்றும் வால்டேர் பிரிவின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரால் பகுப்பாய்வு செய்யப்பட்டன. விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பிரஞ்சீவ் சக்சேனா, லோகோ பைலட்டுகள் கிரிக்கெட்டைப் பார்ப்பது குறித்து எந்தக் குறிப்பும் தெரிவிக்கவில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதில், "வால்டேர் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர், பணியில் இருந்தபோது கிரிக்கெட் பார்த்ததாக லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக குற்றம்சாட்டி பதிவு செய்திருப்பது "கடுமையான" தவறு. இதை நிரூபிக்க இப்போது எந்த ஆதாரமும் இல்லை. இது வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆந்திர ரயில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த லோகோ பைலட் மீதும், அவரது உதவியாளர் மீதும், போதிய ஆதாரம் இல்லாமல் ஒன்றிய ரயில்வே அமைச்சர் தவறாக குற்றம் சாட்டியிருப்பதை அறிய முடிகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குற்றம் சாட்டிய ரயில்வே அமைச்சர்: