YouTurn

NCERT பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் தலைப்பு! தொடரும் NCERT-ன் சர்ச்சைகள்!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் போன்றவற்றிற்கான பாட நூல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வடிவமைத்து வருகிறது. இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ், கேல் யோகா, பூர்வி என இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

NCERT பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் தலைப்பு! தொடரும் NCERT-ன் சர்ச்சைகள்!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகள் போன்றவற்றிற்கான பாட நூல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வடிவமைத்து வருகிறது. இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ், கேல் யோகா, பூர்வி என இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


புதிய கல்விக் கொள்கை மூலம் புதிய பாடத்திட்டம் அறிவிப்பு:

 

தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ மையமாக கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்த NCERT, முதற்கட்டமாக 2024-25-ம் கல்வியாண்டில் 1, 2, 3, 6-ம் வகுப்புகளுக்கும், தொடர்ந்து வரவுள்ள 2025-26-ம் கல்வியாண்டில் 4, 5, 7, 8-ம் வகுப்புகளுக்கும் தேசிய கல்வி கொள்கையின்படி தயாரிக்கப்பட்டுள்ள புதிய பாடப் புத்தகங்கள் அறிமுகம் செய்யயுள்ளதாக அறிவித்திருந்தது.


இந்நிலையில், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் NCERT வெளியிடும் ஆங்கில வழிப் பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது அனைவரின் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்தியில் தலைப்புகள்:


இதுநாள் வரையில்,  NCERT புத்தகங்களில் ஆங்கிலப் பதிப்புகளுக்கு ஆங்கிலப் பெயர்களிலேயே தலைப்புகள் பெயரிடப்பட்டு வந்தன. உதாரணமாக, ஆறாம் வகுப்பு கணிதப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பிற்கு “Mathematics” என்றும் , கணிதப் புத்தகத்தின் இந்தி பதிப்பிற்கு “கணித் (Ganit)” என்றும் , உருது பதிப்பிற்கு “ரியாசி (Riyazi)” என்றும் பெயரிடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தற்போது ஆங்கிலப் பதிப்பு நூல்களுக்கும் இந்தியிலேயே தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.



ஆறாம் வகுப்பு ஆங்கில புத்தகத்துக்கு ஹனிசக்கிள் (Honey suckle) எனப் பெயர் இருந்த நிலையில், தற்போது பூர்வி (Poorvi) என மாற்றப்பட்டுள்ளது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகங்களுக்கு மிருதங் (Mridang) என்றும் மூன்றாம் வகுப்பு ஆங்கில புத்தகத்துக்கு சந்தூர்(Santoor) என்று ஹிந்தியில் இசைக் கருவிகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.



இதே போன்று ஆறாம் வகுப்பு கணித புத்தகங்களுக்கு கணித பிரகாஷ் (Ganita Prakash) என்றும், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி புத்தகங்களுக்கு முறையே பன்சுரி (Bansuri), கேள் யோகா (Khel Yoga) மற்றும் கவுசல் போத் (Kaushal Both) என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளன. 


தொடரும் NCERT சர்ச்சைகள்: 


இதற்கு முன்பும் NCERT பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. NCERT இதற்கு முன்னர் பரிந்துரைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக்குழு, புத்தகத்தில் இந்தியா என்ற பெயருக்கு பதில், பாரதம் என்று இருக்கலாம் என பரித்துரை செய்தது. 


இதே போன்று, 12-ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் பாபா் மசூதி என்பதற்கு பதிலாக ‘மூன்று வடிவ அமைப்பு’ என குறிப்பிட்டது. முகலாய மன்னா்களான ஹுமாயூன், ஷாஜஹான், அக்பா், ஜஹாங்கீா் மற்றும் ஔரங்கசீப் உள்ளிட்டோரின் சாதனைகள் அடங்கிய பட்டியலையம் நீக்கியது. குஜராத் கலவரம் பற்றிய குறிப்புகள், காந்தியின் படுகொலை மற்றும் மௌலானா ஆசாத் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டன


அரசியல் அறிவியல் பாடத்தில் `சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் அரசியல்' என்ற அத்தியாயத்தில் சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் ஆதிக்கம் போன்றவை இடம்பெற்றிருந்த `மக்கள் இயக்கங்களின் எழுச்சி', 'தனிக்கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்', ஜனநாயகத்துக்கான சவால்கள் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டன. மேலும் இந்தி புத்தகத்திலிருந்த உருதுக் கவிதைகளையும் நீக்கியது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு உயிரியல் பாடப் புத்தகங்களிலிருந்து அறிவியலின் அடிப்படைக் கோட்பாடான “டார்வினின் பரிணாமக் கோட்பாடு” பற்றிய பாடங்களையும் நீக்கியது. 


இதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது NCERT-ன் புதிய பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கு ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ், கேல் யோகா, பூர்வி என இந்தி தலைப்புகளில் பெயரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


NCERT-ன் தொடரும் இந்த செயல்பாடுகள், நமது நாட்டின் அடையாளமான பன்முகத்தன்மையை சிதைக்கிறதோ என்ற கேள்வியையே எழுப்புகிறது!

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை