ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் சிக்கிய பாஜக நிர்வாகிகள்.. திமுக நிர்வாகிக்கு தொடர்பில்லை என தருமபுரம் ஆதீனம் விளக்கம் !
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும், அதை சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்டத் தலைவர் உள்பட பலரின் மீது புகார் அளிக்கப்பட்டு நான்கு பேரை கைது செய்த சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தருமபுரம் ஆதீன சைவ மடத்தின் 27வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில், ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாக சிலர் மிரட்டல் விடுத்து வருவதாக கூறி மடாதிபதியின் சகோதரரும், திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் இருந்து வரும் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

அவர் அளித்த புகாரையடுத்து பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், ஆடுதுறையைச் சேர்ந்த வினோத்(பாஜக) , தருமபுரம் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், திருவெண்காடு விக்னேஷ் (பாஜக), கலைமகள் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, செய்யூர் ஜெயசந்திரன், திருக்கடையூர் விஜயகுமார்(திமுக), மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது.