வெறுப்பின் உச்சம்.. பஹல்காம் தாக்குதல் குறித்து பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!
பஹல்காம் தாக்குதல் குறித்து பல பொய் செய்திகள் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அதன் பசுமை நிறைந்த அழகான புல்வெளிகளுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7500-8000 அடி உயரத்தில் இருக்க்கும் இது, மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22 அன்று உள்ளூர் காவலர்களின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர் ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு இந்திய கடற்படை அதிகாரி, ஒரு உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவரும் அடங்குவர். கடந்த முப்பது ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாக இது உள்ளது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து பல பொய் செய்திகள் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி பிடிபட்டான் என்று பரவும் பழைய புகைப்படம்!
காஷ்மீர் பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி பிடிபட்டான், அவன் ஒரு பாஜக நிர்வாகி என்று கூறி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

ஆய்வு செய்ததில், பஹல்காம் தீவிரவாதி என்று குறிப்பிட்டு பரவி வரும் புகைப்படம், கடந்த 2022-ல் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ள தாலிப் ஹூசைன் மற்றும் ஃபைசல் அஹ்மது தார் எனும் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பது உறுதியாகிறது
மேலும் படிக்க: பகல்ஹாம் சுற்றுலாப் பயணிகளை சுட்டுகொலை செய்த தீவிரவாதி பிடிபட்டான் என்று பரவும் பழைய புகைப்படம்!
பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர் என்று பரவும் பழைய வீடியோ!
காஷ்மீரில் இந்துக்களை சுட்ட மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர், அவர்களை துணியில் கட்டி இழுத்து செல்லும் காட்சி என்று வீடியோ ஒன்று பரவியது.

நம் ஆய்வின் முடிவில், பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர் என்று கூறி பரவும் வீடியோ கடந்த 2019-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது
மேலும் படிக்க: பஹல்காம் தாக்குதலோடு தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளைப் பிடித்துவிட்டனர் என்று பரவும் பழைய வீடியோ!
பஹம்காம் தாக்குதலில் உயிர் துறந்த இஸ்லாமியர் குறித்து தவறாக செய்திப் பரப்பும் வலதுசாரிகள்!
பஹல்காம் தாக்குதலின் போது பல உயிர்களை காப்பாற்றியதாக சொல்லப்பட்ட அந்த குதிரைசவாரி வீரன் தான், பயங்கரவாதிகள் இடத்திற்கு சென்று காட்டிக் கொடுத்தாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவியது.

ஆய்வு செய்ததில் குற்றவாளி எஜாஸ் அகமதுவின் புகைப்படத்தை, தீவிரவாத தாக்குதலில் உயிர் துறந்த, “சையத் அடில் ஹுசைன் ஷா” என்று கூறி பலரும் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: பஹம்காம் தாக்குதலில் உயிர் துறந்த இஸ்லாமியர் குறித்து தவறாக செய்திப் பரப்பும் வலதுசாரிகள்!
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்படுதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் எல்லாம் வெடி வைத்துத் தகர்க்கப்படுவதாக 30 நொடிகள் காணொளி ஒன்று பரப்பப்பட்டது.

தேடலில் முடிவில், மே மாதம் 2021 ஆண்டில் கோக்கர்நாக்கில் இந்தியப் படைகள் நடத்திய என்கவுண்டரின் காட்சிகள் இவை என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்படுதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ கைது எனப் பரவும் தவறான வீடியோ!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ அடித்து இழுத்து செல்லப்பட்டு கைது செய்யப்படும் காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

ஆய்வின் முடிவில், கடந்த 2024 நவம்பரில், ஜம்மு காஷ்மீரில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூபிந்தர் சிங் மற்றும் சோஹன் சந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது உறுதியானது.
மேலும் படிக்க: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அசாம் எம்எல்ஏ கைது எனப் பரவும் தவறான வீடியோ!
உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணியை காப்பாற்றும் வீடியோ! உண்மை என்ன?
இந்து மக்கள் கட்சியும், பாஜக ஆதரவாளர்களும் ‘ஒரு வீடியோவை, தற்போது பஹல்காம் சம்பவத்தின் போது எடுக்கப்பட்டதல்ல, உத்தரகாண்ட் நிலச்சரிவின் போது எடுக்கப்பட்டது’ என்று சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள்.

ஆனால் இவை பஹல்காம் சம்பவத்தின் போது எடுக்கப்பட்டவை தான் என்பதை ஆய்வு செய்த போது உறுதி செய்ய முடிந்தது.
மேலும் படிக்க: உள்ளூர் இளைஞர் சுற்றுலா பயணியை காப்பாற்றும் வீடியோ! உண்மை என்ன?
'லெப்டினன்ட் வினய் நர்வால் அவரது மனைவியுடன் இருக்கும் கடைசி காட்சி' என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
தீவிரவாத தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 26 வயதான லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டார். இந்நிலையில் லெப்டினன்ட் வினய் அவரது மனைவியுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

ஆய்வு செய்ததில், இன்ஸ்டாகிராம் பிரபலங்களான ஆஷிஷ் செஹ்ராவத் மற்றும் யாஷிகா சர்மா ஆகியோரின் வீடியோவை, இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் வினய் அவரது மனைவியுடன் காஷ்மீரில் இருக்கும் கடைசி காட்சி என்று கூறி Times Now, Mint, Oneindia Hindi, NDTV, News18 தமிழ்நாடு உட்பட பல ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: 'லெப்டினன்ட் வினய் நர்வால் அவரது மனைவியுடன் இருக்கும் கடைசி காட்சி' என தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் என்று முதல்வர் பேசியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று பரவி வருகிறது.

இது எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மனிதாபிமான பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் என்று முதல்வர் பேசியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு!
தவறான அர்த்தத்துடன் சித்தரிக்கப்படும் வரலாற்றுச் சிறப்ப மிக்க புகைப்படம்!
இராணுவ வீரர் ஒருவர் ஒரு ஆணின் லுங்கியை அவிழ்ந்து சோதனை செய்யும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பதிவிட்டு, ’பாகிஸ்தான் இராணுவத்தினர், ஒருவர் இந்துவா அல்லது முஸ்லிமா என்பதை கண்டுபிடிக்க அவர்கள் சுன்னத் செய்திருக்கிறார்களா என்று லுங்கியை அவிழ்ந்து சோதனை செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்’ என்று சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் பரப்பப்பட்டது.

இந்த படத்திலிருப்பது இந்திய இராணுவ வீரர். லுங்கியில் ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று அவர் சோதனை செய்யப்படுகிறார், இதை பலரும் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க: தவறான அர்த்தத்துடன் சித்தரிக்கப்படும் வரலாற்றுச் சிறப்ப மிக்க புகைப்படம்!
காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?
காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் என்று காணொளி ஒன்று வைரலானது.

ஆய்வு செய்ததில், Azerbaijan நாட்டில் உள்ள நபர்களின் வீடியோவை எடுத்து, அவர்கள் தான் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக தவறாக பரப்புகின்றனர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?