இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பரவிய பொய் செய்திகளின் தொகுப்பு 2..!
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து முதல் பதியாக ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மற்ற பொய் செய்திகளை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தளமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு, அதன் பசுமை நிறைந்த அழகான புல்வெளிகளுக்குப் பெயர் பெற்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7500-8000 அடி உயரத்தில் இருக்க்கும் இது, மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22 அன்று உள்ளூர் காவலர்களின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர் ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு இந்திய கடற்படை அதிகாரி, ஒரு உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவரும் அடங்குவர். கடந்த முப்பது ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பெரிய தாக்குதலாக இது உள்ளது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஆதரவு அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' (டிஆர்எப்) பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த மே 7-ம் தேதி இரவு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாக இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனதாகக் கூறி அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் குறித்து பல பொய் செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாகப் பரவின. அவற்றை தொகுத்து முதல் பதியாக ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மற்ற பொய் செய்திகளை தொகுத்து இங்கு வழங்கியுள்ளோம்.
கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படையால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
இந்திய கப்பல்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்கியதாகவும், அதனால் துறைமுகம் பலத்த சேதமடைந்ததாகவும், அதனை ‘கராச்சி துறைமுக நிர்வாகமே’ ஒப்புக்கொண்டதாகவும் ‘எக்ஸ்’ தளத்தில் பரப்பப்படுகிறது.

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், யூடியூப் தளத்தில் இருந்த பழைய வீடியோவை பதிவிட்டு, கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படை தாக்குதலால் சேதமடைந்ததாக தவறாக பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: கராச்சி துறைமுகம் இந்திய கப்பல்படையால் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் இஸ்ரேல் ஹமாஸ் போர் வீடியோ!
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் அனைத்து வீடுகளும் புகை மண்டலமாக சிதைந்து கிடைப்பதை தெளிவாகக் காண முடிகிறது.

இது குறித்து தேடியதில், வடக்கு காசா பகுதியை சார்ந்த ‘OSAMA A RABEA’ என்னும் இன்ஸ்டாகிராம் பயனர், தனது பக்கத்தில் ஜனவரி 23, 2025 அன்றே வைரலாகும் இவ்வீடியோ காசாவில் அமைந்துள்ள ஜபாலியா முகாமில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளதைக் காண முடிகிறது.
மேலும் படிக்க: ஆபரேஷன் சிந்தூருக்கு பின் பாகிஸ்தானின் நிலை என்று பரவும் இஸ்ரேல் ஹமாஸ் போர் வீடியோ!
இந்தியப் பெண் விமானி பிடிப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன ?
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய பெண் விமானி என்று பரப்பப்படும் புகைப்படம் ஒன்றும், இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக ஒரு வீடியோவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வைரலாகி வருகிறது.


பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்தியப் பெண் விமானி என்று பரப்பப்படும் புகைப்படம், கர்நாடகாவில் நடந்த IAF கிரண் பயிற்சி ஜெட் விபத்துகளிலிருந்து எடுக்கப்பட்டது. அதே போல் இந்தியப் பகுதிகள் அழிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் காணொளி, YouTube இல் 15 நவம்பர் 2020 அன்றே பதிவேற்றப்பட்டடுள்ளது.
மேலும் படிக்க: இந்தியப் பெண் விமானி பிடிப்பட்டதாக பரப்பப்படும் புகைப்படம்! உண்மை என்ன ?
போர் குறித்து பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட பலர் பரப்பிய பொய் செய்திகள்!
பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட, பாகிஸ்தான் ஊடகங்கள் பலவும், இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பல்வேறு தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் தனது ஊடக சந்திப்பின் போது, இந்தியாவின் விமானப்படைத் தளம் அழிக்கப்பட்டதாகக் கூறிய செய்திகள் தவறானவை என்பதையும், ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் IAF விமானத்தில் விபத்து ஏற்பட்டது மற்றும் பாகிஸ்தானின் சைபர் தாக்குதலால் இந்தியாவின் மின்சார கட்டமைப்பில் 70% செயலிழந்துவிட்டது என்றும் பரவும் செய்திகளும் தவறானவையே என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் படிக்க: போர் குறித்து பாகிஸ்தான் ஐஎஸ்பிஆர் தலைமை இயக்குநர் உட்பட பலர் பரப்பிய பொய் செய்திகள்!
போரில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் மரணம் எனப் பரவும் தவறான செய்தி!
இந்தியா பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளின் போது, முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் (27) வீர மரணம் அடைந்தார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பாஜகவினர் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

பரவி வரும் வீடியோவிற்கும், தற்போது நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்க முடிந்தது.
மேலும் படிக்க: போரில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் மரணம் எனப் பரவும் தவறான செய்தி!
‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
நான்கு நபர்களை போலீஸார் கைது செய்து, அடித்து இழுத்துவரும் வீடியோவை பதிவிட்டு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதற்காக போலீஸால் கைது செய்யப்பட்ட நபர்கள் என்று ’தந்தி டிவி’ செய்தி வெளியிட்டுள்ளது.
பரப்பப்படும் வீடியோவில் கைது செய்யப்பட்டிருப்பது வெகு நாட்களாக தேடப்பட்ட வந்த பிரபலமான தாதா ஜூபர் மௌலானா என்பது தெரியவருகிறது. இந்த வீடியோவிற்கும் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.
மேலும் படிக்க: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
குண்டு வீச்சில் சேதமடைந்த கட்டிடங்களையும், தீப்பிடித்து எரியும் விமானங்களையும் காட்சிபடுத்தும் வீடியோவை பதிவிட்டு, இந்தியா ஏவிய பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையத்திற்கு அருகில் விழுந்ததாகவும், இதனால் பாகிஸ்தானில் அணு கதிர்வீச்சு பரவி வருவதாகவும் பாஜகவைச் சேர்ந்தரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது.

பரப்பப்படும் வீடியோ, ஏமன் நாட்டின் சனா சர்வதேச விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி நடத்தியதை தொடர்ந்து எடுக்கப்பட்டது. இதனை தவறாகப் பரப்பியுள்ளனர்.
மேலும் படிக்க: பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை மையம் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?
பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாக பரவும் பொய் செய்திகள்!
பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகக் கூறி இரண்டு வெவ்வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவின.

ரபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய காட்சி என்றும், பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாகவும் பரவிய வரும் செய்திகள் தவறானவையே.
மேலும் படிக்க: பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் ஜெட் விமானங்களை தாக்கியதாக பரவும் பொய் செய்திகள்!