கோயில் மண்டபம் மீது லாரி மோதிய விபத்தை மத ரீதியில் திசை திருப்ப முயற்சிக்கும் பாஜக நிர்வாகி!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள அரசூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் முன்புறம் கருடகம்பம் மற்றும் கிறிஞ்சி என்ற மண்டபங்கள் உள்ளன.
இந்த மண்டபத்தின் மீது கர்நாடகாவில் இருந்து இரும்பு ஏற்றிவந்த லாரி கடந்த 28ம் தேதி மோதியதில் மண்டபம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக பாலிமரின் எக்ஸ் பக்க பதிவில், ’கோவில் மண்டபத்தை இடித்து தரைமட்டமாக்கிய லாரி டிரைவர்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த தலைப்பு ஏதோ ஓட்டுநர் வேண்டுமென்றே லாரியை மண்டபத்தின் மீது மோதி இடித்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விழைகிறது.

மேலும் பாலிமர் பதிவிட்டுள்ள வீடியோவில், ‘கர்நாடகாவில் இருந்து இரும்பு லோடு ஏற்றி வந்த லாரியை அதன் ஓட்டுநர் சாதிக் பாஷா பின் பக்கமாக இயக்கியபோது மண்டபத்தின் மீது மோதியதாக’ கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேறு ஊடகங்களில் வெளியான செய்தியிலும் இச்சம்பவம் குறித்து மேற்கண்டவாறே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி லாரியின் உரிமையாளரின் பெயர் அமானுல்லா கான் என்றும் இழப்பீடு வழங்கக் கோரி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இச்சம்பவம் ஒரு விபத்து. இந்த மண்டபம் சாலையை ஒட்டி அமைந்திருப்பதைக் கூகுள் street view மூலம் காண முடிகிறது. இது தொடர்பாகக் காவல் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால், லாரி ஒட்டியவர் மற்றும் லாரி உரிமையாளர் இருவரும் முஸ்லிம்கள் என்பதால், இச்சம்பவத்திற்கு ஒரு மத அடையாளத்தைக் கொடுக்க வலதுசாரிகள் முயல்கின்றனர்.

பாஜகவைச் சேர்ந்த செல்வக் குமாரும் அவரது எக்ஸ் பக்கத்தில் ’சாதிக் பாட்ஷா ஓட்டி வந்த லாரி மோதி சூலூர் மாரியம்மன் கோவில் தரை மட்டமானது’ எனப் பதிவிட்டுள்ளார். மண்டபம் சேதமானதைக் கோயில் தரைமட்டமானது என்ற பொய்யான தகவலுடன் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இவரது பதிவு அமைந்துள்ளது.

சாலையை ஒட்டியுள்ள கோயில்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதற்கு முன் பல முறை நடந்துள்ளது. ஆனால், இச்சம்பவத்தில் வாகனத்தை ஓட்டியவர் முஸ்லிம் என்பதாலேயே அதற்கு ஒரு மத அடையாளம் கொடுக்க முயல்கின்றனர்.