அமர்பிரசாத் கைதான கொடிக்கம்பம் வழக்கில் கிரேன் என TVS 50 நம்பர் இருப்பதாகப் பரப்பும் பாஜகவினர்.. விளக்கம் அளித்த விசாரணை அதிகாரி

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டில் நடப்பட்டிருந்த 55 அடி உயரம் கொண்ட பாஜக கட்சியின் கொடிக்கம்பத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த கொடிக்கம்பம் கடந்த அக்டோபர் 20 அன்று காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் அங்கு ஏற்பட்ட தகராறில் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமடைந்ததோடு, மாநகராட்சி ஊழியர்கள் தாக்கப்பட்டனர். எனவே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமர்பிரசாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அமர்பிரசாத் நவம்பர் 3-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவினர் பலரும் "அமர் பிரசாத் மீது தொடரப்பட்ட வழக்கின் முதல் தகவறிக்கையில், "TN20AR7011" என்ற பதிவெண் கொண்ட கிரேனை கொடிக் கம்பத்தை அகற்ற முற்பட்ட போது அமர் பிரசாத் தாக்கியதாக கூறி வருகின்றனர். ஆனால் இந்த பதிவெண்ணில் டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டி தான் உள்ளது" என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
உடைக்கப்பட்ட வாகனத்தின் உண்மையான பதிவெண் என்ன ?
இந்த வழக்கின் முதல் தகவறிக்கையில் "எந்தவித அனுமதியும் இன்றி நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு TN-20-AR- 7011 என்ற பதிவெண் கொண்ட சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான கிரேனை வரவழைத்து அகற்ற முற்பட்டபோது மேற்படி நபர்கள் கொடிக்கம்பத்தை அகற்ற விடாமல் எங்களை பணி செய்யவிடாமல் தடுத்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்க முற்பட்டனர்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே இதுகுறித்து இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான, ஆய்வாளர் சதீஷ் அவர்களிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம். அதற்கு பதிலளித்து பேசிய அவர், அந்த வாகனத்தின் எண் AF என்று இருக்க வேண்டும். அதற்கு பதிலாக AR என புகார் மனுவில் இருந்ததால் FIR-ல் இவ்வாறு பதிவு செய்துவிட்டனர். இந்த பதிவெண் அடுத்த 161 வாக்குமூலத்தில் மாற்றப்பட்டும். மேலும் இந்த தகவல் நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
மேலும் இந்த சம்பத்தின் போது தாக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தின் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார். அதில் வண்டியின் பதிவெண் "TN-20-AF-7011" என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் உறுதிசெய்ய முடிந்தது.

இதன் மூலம் கொடிக்கம்பம் அகற்றப்பட்டபோது தாக்கப்பட்ட வாகனம் ஜேசிபி இயந்திரம் தான், ஆனால் புகார் மனுவில் வாகனத்தின் எண் AF என்பதற்கு பதிலாக AR கொடுக்கப்பட்டதால் அதை குறிப்பிட்டு உள்ளனர். இதன் காரணமாக அது டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டி எண் எனப் பாஜகவினரால் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், வாக்குமூலத்தில் பதிவு எண் மாற்றப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கொடிக்கம்பம் விவகாரத்தில் தாக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தின் புகைப்படத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது.
மேலும் அங்கு ஏற்பட்ட தகராறில் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமடைந்ததோடு, மாநகராட்சி ஊழியர்கள் தாக்கப்பட்டனர். எனவே இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமர்பிரசாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அமர்பிரசாத் நவம்பர் 3-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜகவினர் பலரும் "அமர் பிரசாத் மீது தொடரப்பட்ட வழக்கின் முதல் தகவறிக்கையில், "TN20AR7011" என்ற பதிவெண் கொண்ட கிரேனை கொடிக் கம்பத்தை அகற்ற முற்பட்ட போது அமர் பிரசாத் தாக்கியதாக கூறி வருகின்றனர். ஆனால் இந்த பதிவெண்ணில் டிவிஎஸ் எக்ஸ்எல் வண்டி தான் உள்ளது" என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.
அமர் பிரசாத் ரெட்டி மீதான முதல் தகவறிக்கையில்,
"TN20AR7011 பதிவெண் கொண்ட கிரேனை *நாங்கள்* கொண்டு வந்து கொடிக் கம்பத்தை அகற்ற முற்பட்ட போது அமர் பிரசாத் ரெட்டி எங்களை பணி செய்யவிடாமல் தடுத்தார்"
ஆனால்
TN20AR7011 என்ற பதிவெண்ணில் கிரேன் இல்லை ஒரு டிவிஎஸ் எக்ஸ்.எல் வண்டி உள்ளது. pic.twitter.com/7QzEI1d6y0
— அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@NaMo_Bharathan) November 1, 2023
உடைக்கப்பட்ட வாகனத்தின் உண்மையான பதிவெண் என்ன ?
இந்த வழக்கின் முதல் தகவறிக்கையில் "எந்தவித அனுமதியும் இன்றி நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு TN-20-AR- 7011 என்ற பதிவெண் கொண்ட சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான கிரேனை வரவழைத்து அகற்ற முற்பட்டபோது மேற்படி நபர்கள் கொடிக்கம்பத்தை அகற்ற விடாமல் எங்களை பணி செய்யவிடாமல் தடுத்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்க முற்பட்டனர்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
எனவே இதுகுறித்து இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான, ஆய்வாளர் சதீஷ் அவர்களிடம் யூடர்ன் தரப்பிலிருந்து பேசினோம். அதற்கு பதிலளித்து பேசிய அவர், அந்த வாகனத்தின் எண் AF என்று இருக்க வேண்டும். அதற்கு பதிலாக AR என புகார் மனுவில் இருந்ததால் FIR-ல் இவ்வாறு பதிவு செய்துவிட்டனர். இந்த பதிவெண் அடுத்த 161 வாக்குமூலத்தில் மாற்றப்பட்டும். மேலும் இந்த தகவல் நீதிமன்றத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது" எனக் கூறினார்.மேலும் இந்த சம்பத்தின் போது தாக்கப்பட்ட ஜேசிபி வாகனத்தின் புகைப்படங்களையும் அனுப்பி இருந்தார். அதில் வண்டியின் பதிவெண் "TN-20-AF-7011" என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் உறுதிசெய்ய முடிந்தது.