YouTurn

முகமது ஜுபைர் மருது சகோதரர்களை இழிவுப்படுத்தியதாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !

முகமது ஜுபைர் மருது சகோதரர்களை இழிவுப்படுத்தியதாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சுதந்திரத்திற்காக தூக்கு மேடை சென்ற "மருது சகோதரர்களை" இழிவுப்படுத்திய "பூங்கா கரடி" என்னும் முஹம்மது ஜுபயருக்கு விருது வழங்கிய ஸ்டாலின்.

X post link | Archive link 

விரிவான விளக்கம்

2024 குடியரசுத்தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிலையில், சுதந்திரத்திற்காக தூக்கு மேடை சென்ற மருது சகோதரர்களை இழிவுப்படுத்தி பதிவிட்ட ஜுபைருக்கு தமிழ்நாடு அரசு விருது கொடுத்து உள்ளதாக பாஜகவினர் அவரின் இரு ட்வீட் பதிவுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மருது சகோதரர்களின் புகைப்படங்களின் முன்பாக மரியாதை செலுத்தும் படத்தையும், மருது சகோதரர்கள் யார் என்பது குறித்தும் பதிவிட்டு சிரிக்கும் எமொஜியை இணைத்து பதிவிட்டு இருக்கிறார். இதை வைத்தே இழிப்படுத்தியதாகக் கூறி பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.





உண்மை என்ன ?

மருது பாண்டிய சகோதரர்களை முகமது ஜூபைர் இழிவுப்படுத்தியதாகக் கூறி அவரது டிவீட் பதிவு தவறாக பரப்பப்படுகிறது. அந்த ட்வீட் பதிவுகள் கடந்த ஆண்டு கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக பாஜகவினரின் தவறான படங்களுக்கு எதிராக வெளியானவை.

2023 மார்ச் 11ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலை திறப்பிற்காக வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் பொருட்டு மாண்டியாவில் பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்களில் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா மகாத்வாரா என இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

திப்பு சுல்தானுக்கு எதிராக உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா போராடியதாக பாஜகவினர் தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா முற்றிலும் உருவாக்கப்பட்ட புனைவு கதை என வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்போதைய கர்நாடகா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன.

மேலும் படிக்க : உரி கவுடா, நஞ்சே கவுடா என மருது பாண்டியர்கள் படங்களைப் பயன்படுத்திய கர்நாடகா பாஜக !

அவ்வாறு பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்களில் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா எனக் கூறி மருது பாண்டியர்களின் படத்தை தவறாக பயன்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக யூடர்ன் தரப்பிலும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.





அந்த பேனரின் படத்தை பாஜகவின் சி.டி.ரவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவரின் பதிவைக் குறிப்பிட்டு ஜுபைர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் சி.டி.ரவி தவறான படத்தை பயன்படுத்தியதற்காகவே அவரைக் குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜி உடன் பதிவிட்டு இருப்பார். ஆனால், மருது சகோதரர்களை இழிவுப்படுத்தியதாக பாஜகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

முடிவு :

முகமது ஜுபைர் மருது சகோதரர்களை இழிவுப்படுத்தியதாகப் பாஜகவினர் பரப்பும் தகவல் பொய்யானவை. அந்த பதிவு, 2023ல் கர்நாடகா பாஜகவினர் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா எனக் கூறி மருது பாண்டியர்களின் படத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக வெளியிட்ட பதிவை தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க