YouTurn

மதுரை முருகன் மாநாட்டிற்கு காவிக் கொடியுடன் பைக்கில் வந்த பெண் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

மதுரை முருகன் மாநாட்டிற்கு காவிக் கொடியுடன் பைக்கில் வந்த பெண் என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ’காஜல் தத்தா’ என்ற பெண் பொதுவாக பைக்கில் சாகசப் பயணம் செய்து வெளியிட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

மதுரை முருகன் மாநாட்டில் காவி கொடி பட்டொலி வீசி பறந்ததை பார்த்து மிகவும் ஆனந்தமாக இருந்தது.



Link / Archive Link 

விரிவான விளக்கம்

காவி நிறத்தில் புடவை அணிந்த இளம்பெண் ஒருவர், புல்லட் பைக்கில் கையில் காவிநிறக் கொடியுடன் செல்லும் வீடியோவை பதிவிட்டு, சமீபத்தில் மதுரையில் முருகன் மாநாட்டிற்கு  அந்தப் பெண் காவி கொடியுடன் பைக்கில் வந்ததாக சமூக வலைத்தளத்தில் இந்துத்துவவாதிகளால் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், இன்ஸ்டாகிராமில் ‘Kajal Dutta’ என்ற பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. இந்த வீடியோ கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், இந்த பெண் பெங்காலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.



மேலும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்ததில், அவர் இந்த வீடியோவில் இருப்பது போன்று பைக் சாகசம் செய்து வெளியிட்டிருந்த பல வீடியோக்களைக் காணமுடிந்தது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை ‘Biker Girl' என்று குறிப்பிட்டுள்ளார்.



இதிலிருந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ’காஜல் தத்தா’ என்ற பெண் பொதுவாக பைக்கில் சாகசப் பயணம் செய்து இன்ச்டாகிராமில் வெளியிட்ட வீடியோவை, மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டிற்கு செல்லும் போது எடுக்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள் என்பது தெரியவருகிறது. 


முடிவு:


கடந்த ஏப்ரல் மாதம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் பொதுவாக பைக்கில் சாகசப் பயணம் செய்து வெளியிட்ட வீடியோவை, ஜீன் 22ஆம் தேதி நடந்த மதுரை முருகன் மாநாட்டுடன் தொடர்புபடுத்தி இந்துத்துவவாதிகள் தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க