YouTurn

யோகி ஆதித்யநாத் புல்டோசர் மீதேறி பிரச்சாரம் செய்ததாக பாஜகவினர் பரப்பும் தவறான தகவல்!

யோகி ஆதித்யநாத் புல்டோசர் மீதேறி பிரச்சாரம் செய்ததாக பாஜகவினர் பரப்பும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

யோகி ஆதித்யநாத் போன்று உடை அணிந்து புல்டோசர் மீதேறி பிரச்சாரம் செய்தவரின் வீடியோவை தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

யோகி புல்டவுசரால் ரவுடிகளின் வீட்டை இடிப்பது தவறு -அதுக, யோகி: சின்ராசு எடுடா அந்த புல்டவுசர, பிரச்சாரத்துக்கு போவோம்

image.png

X link

விரிவான விளக்கம்

உத்தரப்பிரதேசத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் மற்றும் குற்றம் சாட்டப்படுபவர்களின் வீடுகளை அம்மாநில அரசு புல்டோசர் கொண்டு இடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. 

#BJP4IND pic.twitter.com/rnlRU7zOVq

— Praveen Kumar G.L🧡💚 (@praveen_kgl) December 31, 2024

இந்நிலையில் ”ரவுடிகளின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது தவறு எனச் சிலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர், ஆனால், யோகி ஆதித்யநாத் புல்டோசரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்” என பாஜக-வை சேர்ந்தவர்கள் யோகியில் புல்டோசர் நடவடிக்கைக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 


உண்மை என்ன?


பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு தேடியதில், இந்த வீடியோ கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. 



தற்போது பரவக் கூடிய இவ்வீடியோ பற்றி கடந்த ஆண்டு நவம்பர், 6ம் தேதி ‘ABP’ ஊடகத்தில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பிலேயே ‘Duplicate Yogi Aadityanath’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து யோகி போன்று உடை அணிந்த ஒருவரை புல்டோசரில் ஏற்றிக் கொண்டு பாஜக வேட்பாளர் ஹரீஷ் பிம்பிள் என்பவர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இது தொடர்பாக‘ UCN News’ தளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. இவற்றிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் புல்டோசர் மீது இருப்பது யோகி ஆதித்யநாத் கிடையாது என்பதை அறிய முடிகிறது. 


image.png


மேலும், பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் அரசுக்கு எதிராகப் போராடக் கூடியவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் / கடைகள் சட்டத்திற்குப் புறம்பாக இடிக்கப்பட்டு வந்தது. யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச பாஜக அரசுதான் இதனைத் தொடங்கி வைத்தது.


இது சட்டத்திற்குப் புறம்பானது என்றதுடன், ஒருவரது வீடு இடிக்கப்படுவதற்கு முன்னர் பின்பற்றப்படவேண்டிய 10 வழிகாட்டுதல்களையும் தனது தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி உச்ச நீதிமன்றத்தினால் கண்டிக்கப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான புல்டோசர் செயலைத்தான் பாஜக-வினர் பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர். 


முடிவு: 


பரவக் கூடிய வீடியோவில் இருப்பது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிடையாது. அவரை போன்று உடை அணிந்து கவன ஈர்ப்புக்காக பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை, பாஜகவினரே யோகி ஆதித்யநாத் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.