யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
Mossad என்பது இஸ்ரேலின் national intelligence agency ஆகும். ஆனால் Mossad Commentary என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் blue tick உடன் இருக்கும் இந்த பக்கம் போலியானது.
பரவிய செய்தி
இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாத், இந்திய கடவுள் கிருஷ்ணனின் போர் அவதார கோலத்தை போட்டு டுவீட் செய்திருக்கிறது. புல்லாங்குழல் கையில் வைத்திருக்கும் கண்ணன் என்ன செய்வான். கோபியர்களோடு குலாவுவான்.
சுதர்சன சக்கரம் ஏந்திய கண்ணன் என்ன செய்வான் என்பது இஸ்ரேலுக்கு தெரிந்து இருக்கிறது.

விரிவான விளக்கம்
மொசாத் (Mossad) என்பது இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பாகும். இது உலகில் மிகவும் திறமையான உளவுத்துறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் முக்கிய பணிகள் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு, உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை பாதுகாப்பதாகும்.
இந்நிலையில் Mossad Commentary என்ற எக்ஸ் பக்கத்திலிருந்து, "Notice something?" என்ற வாசகத்துடன் கிருஷ்ணனின் போர் அவதார கோலத்தை டிவிட் செய்துள்ளனர்.
Notice something? https://t.co/ooftufi9iz pic.twitter.com/HilzjFP7V1
இதை பகிர்ந்த பலரும் எதிரிகளை சர்வநாசமாக்க போகிறோம் என்பதே இதன் பொருள் என்றும், இந்த எச்சரிக்கை பாகிஸ்தானுக்காகக் கூட இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.
இஸ்ரேலிய உளவுத்துறை மொஸாத், இந்திய கடவுள் கிருஷ்ணனின் போர் அவதார கோலத்தை போட்டு டுவீட் செய்திருக்கிறது.
புல்லாங்குழல் கையில் வைத்திருக்கும் கண்ணன் என்ன செய்வான். கோபியர்களோடு குலாவுவான்.
சுதர்சன சக்கரம் ஏந்திய கண்ணன் என்ன செய்வான் என்பது இஸ்ரேலுக்கு தெரிந்து இருக்கிறது.… pic.twitter.com/KZRfjJJefb
உண்மை என்ன ?
Mossad Commentary என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது சமயம் தமிழில் செய்தி ஊடகத்தில் 11 மார்ச் 2021 அன்று சிவபெருமானின் திரிசூலம் இந்து புராணங்களில் கூறப்படும் சக்திவாய்ந்த 10 ஆயுதங்களில் மிகச் சக்தி வாய்ந்தது தெரியுமா? தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றைக் காணமுடிந்தது. அதில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படம் குறித்து பசுபதாஸ்திரம், பிரம்மதந்தா, சுதர்ஷன சக்ரா என்ற தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து Mossad Commentary என்ற எக்ஸ் தள பக்கம் உண்மையா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது Euro News ஊடகத்தின் இணையதள பக்கத்தில், "இஸ்ரேல்-ஹமாஸ் போர்: போலி மொசாட் கணக்கு இணையத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது", என்ற தலைப்பில் நவம்பர் 7, 2023 அன்று கட்டுரை வெளியிட்டிருந்தது.

அதில் பரவி வரும் புகைப்படத்தை வெளியிட்ட Mossad Commentary எக்ஸ் பக்கத்தைக் குறிப்பிட்டு, இதில் பெரும்பாலான பதிவுகள் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து, பல்வேறு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இதில் வரும் பதிவுகள் பல சமூக ஊடக பயனர்களையும், பத்திரிக்கையாளர்களையும் கூட இது முறையான கணக்கு என்ற நம்ப வைப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் Mossad Commentary எக்ஸ்தள பக்கம் குறித்துத் தேடிய போது, அக்டோபர் 30, 2023 அன்று, ஹமாஸ் போராளிகள் ஒரு குழந்தையை அடுப்பில் வைத்துக் கொன்றதாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தனர்.
GRAPHIC: EVIL:
Since a NY Post journalist already released this, it is something so evil that it's hard to write.
They baked a baby in the oven.
The evil monsters baked a baby in the oven.
இந்த ஆதாரமற்ற கூற்றை இஸ்ரேலிய உண்மைச் சரிபார்ப்பு தளமான FAKE REPORTER நிராகரித்தது. ஆனால் குழந்தையின் மரணத்தை Mossad அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது என்று பலர் நினைத்ததால் மிகுந்த சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
משם הגיע הסיפור אל חשבון הטוויטר Mossad Commentary שהוסיף ב-3:06 לפנות בוקר בזמן ישראל פרטים נוספים שלא צוינו קודם, לפיהם אביו של התינוק נורה למוות ואמו נאנסה לפחות שלוש פעמים בזמן שהיה בתנור. רבים חשבו בטעות שמדובר בטוויטר הרשמי של המוסד וכי הסיפור זכתה לאישור רשמי. pic.twitter.com/DIBa8BaRni
முடிவு :
நம் தேடலில் Mossad Commentary என்ற பெயரில் எக்ஸ் பக்கத்தில் blue tick உடன் இருக்கும் இந்த பக்கம் போலியானது. மேலும் இந்த எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட செய்தியும் பொய் செய்தியாகும்.