YouTurn

கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் எனப் பரவும் தவறான புகைப்படம்!

கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் எனப் பரவும் தவறான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஜனநாயகத்திற்காக ஒரு சிறிய அடி..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் ஒருவர், மண்டி தொகுதியில் வெற்றிபெற்ற நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததாகவும், விவசாயிகளை கங்கனா ரனாவத் அவமரியாதை செய்ததாலேயே அவ்வாறு தான் அறைந்ததாக அந்த பெண் காவலர் விசாரணையில் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் பெண் ஒருவர் கன்னத்தில் அறை வாங்கியதை தெளிவாகக் காட்டும் படி, கன்னத்தில் கை விரல்களின் தடங்கள் சிவப்பாக பதிந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.



Archive Link:



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இந்த சம்பவம் நடந்த அன்றே (ஜூன் 06) கங்கனா ரனாவத் இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது.

அதில், "எனக்கு ஊடகங்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. முதலில், நான் பாதுகாப்பாக இருக்கிறேன், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். சண்டிகர் விமான நிலையத்தில் இன்று பாதுகாப்பு சோதனையின் போது செக்யூரிட்டி சோதனை முடிந்து நான் வெளியே வந்தபோது, ​​இரண்டாவது கேபினில் இருந்த பெண்மணி, அதாவது ஒரு சிஐஎஸ்எஃப் செக்யூரிட்டி ஊழியர் வந்து, என் முகத்தில் அடித்தார், ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது, ​​அவர் விவசாயிகளை ஆதரிப்பதாகக் கூறினார், நான் பாதுகாப்பாக இருக்கிறேன், ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து நான் கவலைப்படுகிறேன்" என்றும் அதில் அவர் பேசியிருப்பதைக் காண முடிகிறது.



ஆனால் அந்த வீடியோவில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது போன்றே, அடி வாங்கியிருப்பதற்கான சிவப்பு நிற கைத் தடங்களை அவர் முகத்தில் காண முடியவில்லை.

எனவே பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடினோம். Cool Marketing Thoughts என்ற இணையதளத்தில், Baygon’s Anti-Mosquito Spray என்ற கொசு மருந்து விளம்பரத்திற்காக பரவி வரும் அதே புகைப்படம் அங்கு பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.



ஆனால் விளம்பரத்திற்காக பதிவு செய்யப்பட்ட புகைப்படத்தை முகம் தெரியாதவாறு, நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறை வாங்கிய புகைப்படம் என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.



மேலும் படிக்க: கங்கனாவின் இரு ட்வீட்களை “வெறுப்பு பேச்சு விதிமீறல்” என நீக்கிய ட்விட்டர் !

இதற்கு முன்பும் கங்கனா ரனாவத் குறித்து பரவிய செய்திகளை ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், சண்டிகரில் கன்னத்தில் அடி வாங்கிய நடிகை கங்கனா ரனாவத் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் தவறானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க