YouTurn

அண்ணாமலையின் யாத்திரையில் பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் ஆந்திரா வீடியோ !

அண்ணாமலையின் யாத்திரையில் பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் ஆந்திரா வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை..

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

மிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை இராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது. அக்கட்சியின் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பெண்கள் காரில் அமர்ந்து மது அருந்துவதாக 1:30 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





மேற்காணும் வீடியோவில், திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்பட்ட காருக்குள் 6 பெண்கள் அமர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். காருக்கு அருகே சில ஆண்களும் நிற்பதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவிற்கு தமிழ் திரைப்பட பாடல் ஒன்றை பின்னணியில் இணைத்து உள்ளனர்.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2021 மார்ச் 11ம் தேதி பாலிமர் செய்தியில் " ஆந்திராவில் விடுமுறை தினத்தை மது அருந்தி கொண்டாடிய தோழிகள் " என அதே வீடியோ பதிவாகி இருக்கிறது.



மேலும் தேடுகையில், " ஆந்திராவில் விடுமுறை நாளை கொண்டாடி மகிழ காரில் புறப்பட்ட பெண்கள் மது குடித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனினும் வீடியோ வைரலாகியதால், போக்குவரத்து விதிகளை மீறியதால் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக " சமயம் தமிழ் மற்றும் ஒன் இந்தியா தமிழ் உள்ளிட்ட இணையதளங்களில் இதே வீடியோவின் புகைப்படங்களும் செய்தி வெளியாகி இருக்கிறது.



எனினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விரிவான தகவல்களோ, வீடியோவோ எந்த செய்தியிலும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க : அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !

மேலும் படிக்க : இராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடும் பாஜகவினர் எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட செய்தி !

இதற்கு முன்பாக, அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பாக வேறு சில பொய் செய்திகளும் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன. அதுகுறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், பெண்கள் காரில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ அண்ணாமலையின் பாத யாத்திரை நிகழ்வில் எடுக்கப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது. அந்த வீடியோ கடந்த 2021ல் ஆந்திராவில் எடுக்கப்பட்டதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க