YouTurn

பேருந்து ஓட்டுநர் இருக்கையை விட்டு இறங்க மறுக்கும் பெண்.. உண்மை சம்பவம் எனப் பரவும் காமெடி வீடியோ !

பேருந்து ஓட்டுநர் இருக்கையை விட்டு இறங்க மறுக்கும் பெண்.. உண்மை சம்பவம் எனப் பரவும் காமெடி வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

அத வேற எங்கயாவது உக்காந்து ஓட்டவேண்டிது தான இங்கயேதான் உக்காரணுமாங்குது அந்தம்மா... பெரிய பஸ்ஸு, இதவிட அழகழகான பஸ்ஸுலாம் விட்டு உன்னோட வண்டில ஏறுனேன் பாரு.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பேருந்து ஒன்றில் இடமில்லாமல் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்ட பெண் ஓட்டுநரை வேறு இருக்கையில் அமர சொல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் கிண்டலாகப் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

பேருந்தில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஓட்டுநருக்கு இடமளிக்காமல் அவரிடம் வாக்குவாதம் செய்யும் பெண்ணின் வீடியோவின் உண்மைதன்மையை குறித்து ஆராய்ந்த போது அந்த வீடியோ உண்மை சம்பவம் இல்லை என்பதை அறிய முடிந்தது.



இந்த வீடியோ கடந்த ஜூலை 2020 ஆம் ஆண்டு "AAI JI" எனும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காமெடி குறும்படம். மேலும் அந்த வீடியோவின் தலைப்பு ஹிந்தியிலும், ஆங்கிலத்தில் மார்வாடி காமெடி, ஹேமா பிரஜபத் (Hema Prajapat) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹேமா பிரஜபத்தை பற்றி தேடியபோது அவர் ஒரு நடிகை என்பதும், இது போன்ற பேருந்து காமெடியில் நடித்திருக்கிறார் என்பதும் அறிய முடிந்தது.



மேற்கொண்டு தேடிய போது முகநூலில் ஹேமா பிரஜபத்தின் வேறொரு பேருந்து காமெடி வீடியோ HP Music & Films என்னும் முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 2020இல் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளத.

முடிவு :

நம் தேடலில் பேருந்தில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஓட்டுனருக்கு இடம் அளிக்க மறுக்கும் பெண்ணின் வீடியோ உண்மையான சம்பவம் அல்ல. அது ஒரு நகைச்சுவை குறும்படம் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க